ETV Bharat / bharat

சூரியனை ஆய்வு செய்ய ஆதித்யா செயற்கைக்கோள் அனுப்பத் திட்டம் - Aditya satellite to study the Sun

புதுச்சேரி: சூரியனை ஆய்வு செய்ய ஆதித்யா செயற்கைக்கோளை அனுப்ப திட்டமிட்டுள்ளதாக ஸ்ரீஹரிகோட்டா சதீஸ் தவான் விண்வெளி ஆராய்ச்சி மைய இயக்குநர் ராஜராஜன் தெரிவித்துள்ளார்.

சூரியனை ஆய்வு செய்ய ஆதித்யா செயற்கைகோள் அனுப்ப திட்டம்
சூரியனை ஆய்வு செய்ய ஆதித்யா செயற்கைகோள் அனுப்ப திட்டம்
author img

By

Published : Jan 18, 2020, 6:32 PM IST

புதுச்சேரி உப்பளம் பகுதியில் அமைந்துள்ள பெத்தி செமினார் தனியார் பள்ளியில் இன்று அறிவியல் கண்காட்சி நடைபெற்றது. கண்காட்சியில் சதீஷ் தவான் விண்வெளி ஆராய்ச்சி மையத்தின் இயக்குநர் ராஜராஜன் சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்டு ரிப்பன் வெட்டி தொடங்கி வைத்தார். பின்னர், அவர் மாணவர்கள் காட்சிபடுத்தியிருந்த மீன் வளர்ப்பு முறைகள், காடு மாதிரி, பிளாஸ்டிக் தவிர்ப்பு மாதிரி ஆகியவற்றைப் பார்வையிட்டார்.

முன்னதாக, கண்காட்சியில் மாணவர்களிடையே ராஜராஜன் பேசும்போது, "பள்ளியில் வழங்கும் செயல்பாடுகளை (Project) விலை கொடுத்து வாங்காதீர்கள். படிப்பு மட்டுமில்லாமல் தனிமனித சுயஒழுக்கம் மிகமுக்கியம். இதுவே மேலான இடத்திற்கு உங்களைக் கொண்டு செல்லும். படிப்பைத் தவிர்த்து வேறு எதையும் கவனத்தில் எடுத்துக் கொள்ளாதீர்கள்" என்று பேசினார்.

தொடர்ந்து, மாணவர்கள் பல்வேறு கேள்விகளை எழுப்பினர். அதில் மாணவர் ஒருவர் சந்திராயன் 3 எப்போது அனுப்பப்படும் என்ற கேள்விக்கு 'விரைவில் அனுப்பப்படும்' என்று அவர் பதிலளித்தார்.

பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த ராஜராஜன், "சூரியனை ஆய்வு செய்ய ஆதித்யா செயற்கைக்கோளை விரைவில் அனுப்பத் திட்டமிடப்பட்டுள்ளது. இதன் மூலம் இந்திய மக்களின் மனிதவள மேம்பாட்டிற்கும், இந்தியாவின் தண்ணீர் குறைகளைத் தீர்க்கவும் உபயோகமாக இருக்கும்" என்றார்.

சூரியனை ஆய்வு செய்ய ஆதித்யா செயற்கைக்கோள் அனுப்பத் திட்டம்

மேலும், குலசேகரப் பட்டினத்தில் ராக்கெட் ஏவுதளம் அமைக்க தொடக்க கட்டப் பணிகள் நடைபெற்று வருகிறது என்றும் ராஜராஜன் தெரிவித்தார்.

இதையும் படிங்க: பி.எஸ்.எல்.வி. வரலாற்றில் 50ஆவது திட்டத்தை வெற்றிகரமாகச் செயல்படுத்தி சாதித்த இஸ்ரோ!

Intro:சூரியனை ஆய்வு செய்ய ஆதித்யா செயற்கைகோள் விரைவில் அனுப்ப நடவடிக்கை. குலசேகர பட்டினத்தில் ராக்கெட் ஏவுதளம் அமைக்க தொடக்க கட்ட பணிகள் நடந்து வருகிறது - ஸ்ரீஹரிகோட்டா சத்திஸ்தவான் விண்வெளி ஆராய்ச்சி மைய இயக்குநர் ராஜராஜன் பேட்டிBody:புதுச்சேரி 18-01-2020
சூரியனை ஆய்வு செய்ய ஆதித்யா செயற்கைகோள் விரைவில் அனுப்ப நடவடிக்கை. குலசேகர பட்டினத்தில் ராக்கெட் ஏவுதளம் அமைக்க தொடக்க கட்ட பணிகள் நடந்து வருகிறது - ஸ்ரீஹரிகோட்டா சத்திஸ்தவான் விண்வெளி ஆராய்ச்சி மைய இயக்குநர் ராஜராஜன் பேட்டி...

புதுச்சேரி உப்பளம் பகுதியில் அமைந்துள்ள பெத்தி செமினார் தனியார் பள்ளியில் அறிவியல் கண்காட்சி தொடங்கியது. இதில் சதீஷ்தவான் விண்வெளி ஆராய்ச்சி மையத்தின் இயக்குனர் ராஜராஜன் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார். தொடர்ந்து அவர் அறிவியல் கண்காட்சியை ரிப்பன் வெட்டி தொடங்கி வைத்தார். மாணவர்கள் காட்சி படைப்புகளாக வைக்கப்பட்டிருந்த மீன் வளர்ப்பு முறைகள் காடுகள் பிளாஸ்டிக் தவிர்ப்பு இயற்கையில் உருவான காடுகள் ஆகியவற்றை பார்வையிட்டார்.

முன்னதாக மாணவர்களிடையே சிறப்புரையாற்றினார். அதில் பள்ளியில் வழங்கும் (Project-களை) செயல்பாடுகளை விலை கொடுத்து வாங்காதீர்கள்.படிப்பு மட்டும் இல்லாமல் தனிமனித சுய ஒழுக்கம் மிக முக்கியம்.இதுவே மேலான இடத்திற்கு கொண்டு உங்களை செல்லும். படிப்பை தவிர்த்து வேறு எதையும் கவனித்திலும் கொள்ளாதீர்கள். மாணவர்கள் நேர்மறையான எண்ணங்களை மட்டும் கொள்ளுங்கள் என்று பேசினார். தொடர்ந்து மாணவர்கள் பல்வேறு கேள்விகளை எழுப்பினர் அதில் ஒரு மாணவர் சந்திராயன் 3 எப்போது தேவைப்படும் என்று கேள்வி எழுப்பியதற்கு விரைவில் அனுப்பப்படும் என்று பதிலளித்தார்.

தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த அவர், சூரியனை ஆய்வு செய்ய ஆதித்யா செயற்கைகோள் விரைவில் அனுப்ப நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் சூரியனின் தன்மை மற்றும் பல்வேறு செயல்பாடுகளை ஆய்வு செய்ய உள்ளதாகவும் தெரிவித்தனர் பல விண்வெளி ஆராய்ச்சிகளுக்கு கோள்களை அனுப்பி வருவதாக மும்பை இந்திய மக்களின் மனிதவள மேம்பாட்டிற்கும் இந்தியாவின் தண்ணீர் குறைகளைத் தீர்க்கவும் பயன்படுத்தப்படும் என்றும் தெரிவித்தார். மேலும் குலசேகர பட்டினத்தில் ராக்கெட் ஏவுதளம் அமைக்க தொடக்க கட்ட பணிகள் நடந்து வருகிறது. அங்கு அமைப்பது பல்வேறு செயல்களுக்கு உறுதுணையாக இருக்கும் என்றும் தெரிவித்தார்.

பேட்டி_ராஜராஜன்- -சத்திஸ்தவான் விண்வெளி ஆராய்ச்சி மைய இயக்குநர்Conclusion:சூரியனை ஆய்வு செய்ய ஆதித்யா செயற்கைகோள் விரைவில் அனுப்ப நடவடிக்கை. குலசேகர பட்டினத்தில் ராக்கெட் ஏவுதளம் அமைக்க தொடக்க கட்ட பணிகள் நடந்து வருகிறது - ஸ்ரீஹரிகோட்டா சத்திஸ்தவான் விண்வெளி ஆராய்ச்சி மைய இயக்குநர் ராஜராஜன் பேட்டி
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.