ETV Bharat / bharat

புதிய கல்வி கொள்கைக்கு எதிர்ப்பு - புதுச்சேரியில் கண்டன ஆர்ப்பாட்டம் - தேசிய கல்வி கொள்கை

புதுச்சேரி: புதிய கல்விக் கொள்கைக்கு எதிர்ப்பு தெரிவித்து பெரியாரிய உணர்வாளர்கள் கூட்டமைப்பு சார்பில் அண்ணா சிலை அருகே கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

protest
protest
author img

By

Published : Aug 11, 2020, 2:59 PM IST

மத்திய அரசு கொண்டு வந்துள்ள தேசிய கல்வி கொள்கை, மாநில அரசின் கல்வி உரிமை பறிப்பு, 3 மற்றும் 5ஆம் வகுப்புகளுக்கு பொதுத்தேர்வு, 8 முதல் 12 ஆம் வகுப்பு வரை 8 செமஸ்டர் தேர்வுகள் என சமூக நீதிக்கு எதிரான பல அம்சங்கள் இதில் இருப்பதாக எதிர்ப்பு தெரிவித்து பெரியாரிய உணர்வாளர்கள் கூட்டமைப்பு சார்பாக கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

மத்திய அரசின் இத்திட்டத்தால், மாணவ மாணவிகள் கடுமையாக பாதிக்கப்படுவர் என்றும், புதிய கல்விக் கொள்கையை ரத்து செய்ய வேண்டுமெனவும் அப்போது வலியுறுத்தப்பட்டது. மேலும், சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீட்டு வரைவு 2020 ஐயும் திரும்பப் பெற வேண்டும் என முழக்கங்கள் எழுப்பப்பட்டன.

புதிய கல்வி கொள்கைக்கு எதிர்ப்பு - புதுச்சேரியில் கண்டன ஆர்ப்பாட்டம்

புதுச்சேரி திராவிடர் விடுதலைக் கழக தலைவர் லோகு அய்யப்பன் தலைமையில், அண்ணா சிலை அருகே நடைபெற்ற இந்த கண்டன ஆர்ப்பாட்டத்தில் மக்கள் வாழ்வுரிமை இயக்கத்தின் ஜெகநாதன், மீனவர் விடுதலை வேங்கை அமைப்பின் மங்கையர் செல்வன், மக்கள் உரிமைக் கூட்டமைப்பின் சுகுமாறன், தமிழர் தேசிய முன்னணியின் தமிழ்மணி உள்ளிட்ட ஏராளமானோர் கலந்துகொண்டனர்.

இதையும் படிங்க: சூழலியல் தாக்க மதிப்பீட்டு வரைவுக்கு மக்கள் கோலமிட்டு எதிர்ப்பு!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.