ஜம்மு காஷ்மீர் மாநிலத்தின் முக்கிய அரசியல் கட்சிகளான தேசிய மாநாட்டுக் கட்சி, மக்கள் ஜனநாயகக் கட்சி உள்ளிட்ட ஆறு அரசியல் கட்சிகள் ஒன்றிணைந்து, நீக்கப்பட்ட சிறப்பு அந்தஸ்தை மீண்டும் வழங்கக் கோரி "மக்கள் கூட்டணிக்கான குப்கர் ஒப்பந்தம்" என்ற ஒரு அமைப்பை உருவாக்கியுள்ளனர்.
இதற்கு ஆதரவு கோரும் விதமாக, தேசிய மாநாட்டுக் கட்சியின் துணைத் தலைவர் உமர் அப்துல்லா, மக்கள் ஜனநாயக கட்சியின் பொதுச்செயலாளர் குலாம்நபி ஹஞ்சுரா, இளைஞரணித் தலைவர் வாஹித் பார்ரா, ஹவாமி தேசிய மாநாட்டுக் கட்சியின் துணைத் தலைவர் முசாபர் ஷா ஆகியோர் கார்கிலுக்குச் சென்றுள்ளனர்.
இது குறித்து உமர் அப்துல்லா தனது ட்விட்டர் பக்கத்தில், "மக்கள் கூட்டணிக்கான குப்கர் ஒப்பந்த அமைப்பின் தலைவர்கள் கார்கிலுக்குச் சென்று எதிர்காலத் திட்டம் குறித்து மக்களுடன் ஆலோசனையில் ஈடுபடவுள்ளனர்" எனப் பதிவிட்டுள்ளார்.