ETV Bharat / bharat

தேனீக்களாய் மாறிய மதுப்பிரியர்கள்!

author img

By

Published : May 4, 2020, 7:20 PM IST

Updated : May 5, 2020, 11:27 AM IST

டெல்லி: கரோனா முழு அடைப்பு காரணமாக மூடப்பட்டிருந்த மதுக்கடைகள், இன்று திறக்கப்பட்ட நிலையில் வாடிக்கையாளர்கள் தகுந்த இடைவெளி உத்தரவை மீறி ஒன்று திரண்டனர்.

Liquor shops Delhi  Delhi liquor  Lockdown guidelines  COVID-19  மது விற்பனை, கோவிட்-19 பெருந்தொற்று, கரோனா வைரஸ், மதுக் கடைகள், டெல்லி, திறப்பு

நாட்டின் தலைநகர் டெல்லியில் கரோனா பாதிப்பாளர்களின் எண்ணிக்கை தொடர்ச்சியாக அதிகரித்து வரும் நிலையில், மதுக்கடைகள் இன்று திறக்கப்பட்டன. மதுக்கடைகள் திறக்கப்பட்ட உற்சாகத்தில், அப்பகுதியில் மதுப்பிரியர்கள் அதிகளவில் கூடினர். இதனால் தகுந்த இடைவெளியை கடைப்பிடிப்பதில் சிக்கல் ஏற்பட்டது.

நிலைமை விபரீதம் ஆவதை உணர்ந்த மதுக்கடை ஊழியர்கள் காவலர்களுக்கு தகவல் தெரிவித்தனர். சம்பவப் பகுதிக்கு வந்த காவலர்கள், மதுக் கடையை மூடி, கூட்டத்தை கலைத்தனர்.

டெல்லியில் காலை 9 மணி முதல் மாலை 6.30 மணி வரை மதுக்கடைகள் திறக்க அனுமதி அளிக்கப்பட்டிருந்தது. டெல்லியில் முழு அடைப்பு தளர்வுகளின் அடிப்படையில் 150 மதுக்கடைகள் இயங்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.

தேனீக்களாக மாறிய மதுப்பிரியர்கள்!

அதுவும் இரு தினங்களுக்கு மட்டும் மது விற்பனைக்கு அனுமதி அளிக்கப்பட்டிருந்தது. மார்ச் மாதம் தொடங்கிய முழு அடைப்புக்கு பின்னர் மதுக்கடைகள் மூடப்பட்டதால், வாடிக்கையாளர்கள் அதிகளவில் ஒன்றுகூடியுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க: ஆந்திரா, கர்நாடகாவில் மதுக்கடைகள் திறப்பு

Last Updated : May 5, 2020, 11:27 AM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.