Latest National News - இதுகுறித்து செய்தியாளர்களிடம் பேசிய பிரகாஷ் ஜவடேகர், "சட்டப்பிரிவு 370 நீக்கப்பட்டதன் மூலம் காஷ்மீர் வளர்ச்சிப் பாதையை நோக்கி நகர்ந்துள்ளது. கட்டாய கல்வியின் கீழ் வழங்கப்படும் 25 விழுக்காடு இலவச கல்வி உள்ளிட்ட 126 சட்டங்களை முன்பு காஷ்மீரில் அமல்படுத்த முடியாமல் இருந்தது. ஆனால் இப்போது அவையனைத்தையும் காஷ்மீரில் அமல்படுத்தலாம், இதனால் காஷ்மீர் மக்கள் மகிழ்ச்சியில்தான் உள்ளனர்" என்றார்.
நடைபெறவிருக்கும் மகாராஷ்டிரா, ஹரியானா சட்டப்பேரவை தேர்தல்களில் வாக்காளர்களைக் கவரவே காஷ்மீரின் சிறப்பு அந்தஸ்து ரத்து செய்யப்பட்டதாக எதிர்க்கட்சிகள் கூறுவது பற்றி கேட்டபோது, "சட்டப்பிரிவு 370 நீக்கப்பட்டது ஒரு வரலாற்று நிகழ்வு, இதை அனைத்து தரப்பு மக்களும் வரவேற்றுள்ளனர்." என்று கூறினார்.
மேலும், "சட்டப்பிரிவு 370 காரணமாகவே காஷ்மீரில் பாகிஸ்தான் தொடர்ந்து பிரிவினைவாத சிந்தனைகளையும் தீவிரவாதத்தையும் விதைத்து வந்தது. இப்போது அதுவும் தடுக்கப்பட்டுள்ளது" என்றார்.
காஷ்மீரிலுள்ள மக்களின் நிலை குறித்துப் பேசியவர், " இரண்டு மாதங்களாகத் துப்பாக்கிச் சூடும், உயிர் பலியும் காஷ்மீரில் நடக்காமல் இருப்பது இதுவே முதல்முறை. மேலும், ஊடக சுதந்திரமும் அங்கு கட்டுப்படுத்தப்படவில்லை" என்றார்.
இதையும் படிக்கலாமே: சென்சாருக்குள் வருகிறதா ஹாட்ஸ்டார், நெட்பிலிக்ஸ்?