மருத்துவமனையில் ஆக்சிஜன் வசியில்லாததால் குழந்தைகள் உயிரிழப்பு, ஆம்புலன்ஸ் வசதி இல்லாதததால் சிறுமியின் சடலத்தை வீடு வரை தூக்கிச் சென்ற அவலம் போன்ற செய்திகள் தற்போது அடிக்கடி சமூக வலதளங்களை ஆக்கரமித்து வருகின்றன.
இதேபோன்று ஒடிசா மாநிலம் கியோன்ஜோர் மாவட்டத்தில் அரங்கேறியுள்ளது. ஆம்புலன்ஸ் செல்வதற்கு சரியான சாலை வசதி இல்லாததால் உடல்நிலை சரியில்லாத பெண்ணை ஸ்ட்ரெச்சரில் வைத்து 5 கி.மீ வரை தூக்கிச் சென்ற அவலம் நேர்ந்துள்ளது.
அதையடுத்து, அந்த பெண், ஆம்புலன்ஸில் ஏற்றி மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டார். இதனிடயே சமூகவலதளங்களில் இது பெரும் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது. குறிப்பாக, ‘உயிருக்கு ஆபத்து என்றாலும் 5 கிமீ ஓட வேண்டுமா? பொதுமக்களின் அடிப்படை தேவைகளை நிறைவேற்றாமல் மத்திய, மாநில அரசுகள் எவ்வளவு திட்டங்கள் அறிவித்து நிறைவேற்றினாலும் அது மக்களுக்கு பயனில்லாமல் தான் இருக்கும்’ உள்ளிட்ட கருத்துகளை நெட்டிசன்கள் பதிவிட்டு வருகின்றனர்.