ETV Bharat / bharat

தேர்வுகளை தள்ளிவையுங்கள்: சிபிஎஸ்இ மாணவர்களின் பெற்றோர் உச்ச நீதிமன்றத்தில் மனு!

author img

By

Published : Jun 10, 2020, 3:39 PM IST

நாடு முழுவதும் கோவிட்-19 தொற்று அதிகரித்துள்ள நிலையில், சிபிஎஸ்இ தேர்வுகளை நடத்த மையம் எடுத்த முடிவுக்கு எதிராக பெற்றோர்கள் உச்ச நீதிமன்றத்தை நாடியுள்ளனர். தேர்வுகள் தற்போது ஜூலை 1 முதல் ஜூலை 15ஆம் தேதி வரை நடத்த சிபிஎஸ்இ திட்டமிட்டுள்ளது.

cbse exam, சிபிஎஸ்இ தேர்வு
cbse exam

டெல்லி: சிபிஎஸ்இ வாரிய தேர்வெழுத தயாராக இருக்கும் 12ஆம் வகுப்பு மாணவர்களின் பெற்றோர்கள் இணைந்து மே 18ஆம் தேதி சிபிஎஸ்இ அறிவிப்பை ரத்து செய்யக்கோரி உச்ச நீதிமன்றத்தில் பொது நல வழக்கு ஒன்றை தாக்கல் செய்துள்ளனர்.

ஜூலை 1 முதல் நிறுத்திவைக்கப்பட்ட தேர்வுகள் மீண்டும் தொடங்கும் என்று சிபிஎஸ்இ அறிவித்திருந்தது. "உலக சுகாதார அமைப்பும், இந்திய மருத்துவக் கழகமும் ஜூலை மாதத்தில் கரோனா தொற்று அதிகமாக இருக்கும் என்று தெரிவித்துள்ளது.

இச்சூழலில் மாணவர்களின் உடல்நலனை சிபிஎஸ்ஐ கருத்தில்கொள்ள வேண்டும். ஜூலை மாதத்தில், வெப்பம் அதிகமாக இருக்கும்பட்சத்தில் கையுறை, முகக் கவசம் அணிந்துகொண்டு மாணவர்கள் 4 மணிநேரம் தேர்வறையில் இருக்க வேண்டும்.

இம்மாதிரியான சூழல்கள் மாணவர்கள் எதிர்கொள்ள முடியாதவை. எனவே தேர்வை உடனடியாக ரத்து செய்யவேண்டும். மாணவர்களின் திறனாய்வு மதிப்பெண்களை வைத்து தேர்வு முடிவுகளை வெளியிடவேண்டும்" என்று பெற்றோர்கள் அளித்த மனுவில் தெரிவிக்கப்பட்டிருந்தது.

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.