ETV Bharat / bharat

காரைக்காலில் குளம் வெட்டியபோது பழங்கால ஐம்பொன் சாமி சிலைகள் கண்டெடுப்பு! - காரைக்காலில் பழங்கால ஐம்பொன் சுவாமி சிலைகள் கண்டெடுப்பு

புதுச்சேரி: காரைக்காலில் குளம் வெட்டியபோது பழங்கால ஐம்பொன் சாமி சிலைகள் கண்டெடுக்கப்பட்டுள்ளன.

காரைக்காலில் குளம் வெட்டிய போது, பழங்கால ஐம்பொன் சுவாமி சிலைகள் கண்டெடுப்பு.

author img

By

Published : Sep 23, 2020, 10:24 PM IST

புதுச்சேரி மாநிலம் காரைக்கால் மாவட்டம் சேத்தூர் அருகே உள்ள திருவாசல்திடல் கிராமத்தில், வேளாண் பண்ணை அமைப்பதற்காக பொக்லைன் இயந்திரம் மூலம் தொழிலாளர்கள் குளம் வெட்டினர். அப்போது பூமிக்கு அடியிலிருந்து திடீரென ஒருவிதமான ஒலி சத்தம் எழும்பியது.

இதையடுத்து குளம் வெட்டுவதை நிறுத்திய தொழிலாளர்கள் சத்தம் வந்த பகுதியில் ஆழமாக கைகளால் தோண்டினர். அப்போது பூமிக்கு அடியில் இரண்டடி உயரமுள்ள இரண்டு சாமி சிலைகள் இருப்பது தெரியவந்தது. இதையடுத்து சிலைகளை வெளியே எடுத்து பார்த்தபோது அது பழங்காலத்து வரதராஜ பெருமாள், காலிங்க நர்த்தன கிருஷ்ணர் சிலைகள் எனத் தெரியவந்தது.

பின்னர், மீட்கப்பட்ட சாமி சிலைகள் காரைக்கால் வருவாய்த்துறை அலுவலரிடம் பொதுமக்கள் ஒப்படைத்தனர். அதனைத் தொடர்ந்து இரு ஐம்பொன் சிலைகளும் காரைக்காலில் உள்ள வட்டாட்சியர் அலுவலகத்துக்கு எடுத்துச் செல்லப்பட்டன.

இதையும் படிங்க...சமூக வலைதள காணொலிகளை தணிக்கை செய்ய தனி வாரியம் கோரிய மனு - அக்.14 விசாரணை

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.