ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பின் உறுப்பு நாடுகள் இடையே ராணுவ ஒத்துழைப்பை அதிகரிப்பது தொடர்பான முதல் கூட்டம் டெல்லியில் இன்று நடைபெற்றது.
பாதுகாப்புத் துறை சார்பில் ஒருங்கிணைக்கப்பட்ட இந்தக் கூட்டத்தில் பாகிஸ்தானுக்கும் அழைப்பு விடுக்கப்பட்டது. ஆனால், பாகிஸ்தான் சார்பாக ஒரு பிரதிநிதிகூட கூட்டத்தில் கலந்துகொள்ளவில்லை.
ஜம்மு-காஷ்மீர் வழங்கப்பட்டுவந்த சிறப்புத் தகுதியை மத்திய அரசு ஆகஸ்ட் 5ஆம் தேதி ரத்து செய்தது. இதற்கும் கடும் கண்டன் தெரிவித்த பாகிஸ்தான் இந்தியாவுடனான தூதரக, வணிக உறவுகளை முறிந்துக்கொண்டது. மேலும், காஷ்மீர் பிரச்னையை சர்வதேச பிரச்னையாக்கும் நோக்கில் பாகிஸ்தான் தொடர்ந்து முயன்றுவருவது குறிப்பிடத்தக்க ஒன்று.