போர்நிறுத்த ஒப்பந்தத்தைக் கருத்தில் கொள்ளாமல் இருநாடுகளுக்கும் இடையிலான எல்லைப்பகுதியில் பாகிஸ்தான் ராணுவத்தினர் தொடர்ந்து தாக்குதல் நடத்திவருகின்றனர்.
இந்நிலையில், ஜம்மு-காஷ்மீரின் பூஞ்ச் மாவட்டம் ஷாப்பூர், கசபா ஆகிய இடங்களில் உள்ள இந்திய நிலைகளின் மீது பாகிஸ்தான் ராணுவத்தினர் நேற்று பிற்பகல் மாலை எதிர்பாராத நேரத்தில் தாக்குதல் நடத்தினர்.
துப்பாக்கிச் சூட்டில் தொடங்கிய இத்தாக்குதலுக்கு இந்திய வீரர்களும் தக்க பதிலடி கொடுத்தனர். இது குறித்து பாதுகாப்புப்படை தரப்பில் கூறும்போது, "நேற்று மாலை 5.45 மணியளவில் இந்தத் தாக்குதலை பாகிஸ்தான் படையினர் தொடங்கினர். இரண்டு நாள்களில் இது இரண்டாவது தாக்குதல்.
முன்னதாக, சனிக்கிழமையன்று பூஞ்ச் மாவட்டத்தில் உள்ள மான்கோட் எல்லைப் பகுதியில், பாகிஸ்தான் படையினர் மோர்ட்டார் குண்டுகளை வீசி தாக்குதலில் ஈடுபட்டனர்" எனத் தெரிவித்தனர். இருதரப்பினரிடையே நீடித்துவரும் துப்பாக்கிச் சண்டையில் உயிரிழப்பு ஏதும் ஏற்படவில்லை எனத் தெரியவந்துள்ளது.
இதையும் படிங்க: இந்திய ரயில்வே பயணிகளின் பாதுகாப்பிற்கு முக்கியத்துவம் கொடுக்கிறதா?