மத்திய ஆயுத காவல்படையின் காலி பணியிடங்கள் குறித்த விவரங்களை மத்திய உள்துறை இணை அமைச்சர் நித்யானந்த் ராய் மாநிலங்களவையில் தெரிவித்தார். அதில், பணி ஓய்வு, ராஜினாமா, மரணம் உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் நாட்டிலுள்ள ஆயுத காவல்படையின் காலியிடங்கள் ஒரு லட்சத்துக்கும் மேலாக உள்ளன.
அதிகபட்சமாக எல்லை பாதுகாப்புப் படையில் 28 ஆயிரத்து 926 இடங்களும், மத்திய ரிசர்வ் காவல் படையில் 26 ஆயிரத்து 506 இடங்களும், மத்திய தொழிற்சாலை பாதுகாப்புப் படையிலும் 23 ஆயிரத்து 906 இடங்களும் காலியாகவுள்ளன. இந்தப் பணியிடங்களை நிரப்பு மத்திய அரசு தொடர் நடவடிக்கைகளை மேற்கொண்டுவருகிறது எனவும் முதற்கட்டமாக 60 ஆயிரத்து 210 காவலர்கள் பணியடங்கள், 2 ஆயிரத்து 534 துணை ஆய்வாளர்கள் பணியிடங்களும் நிரபப்படவுள்ளதாகக் கூறப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: விவசாயிகள் தற்கொலை பற்றி பல மாநில அரசுகள் முறையாக தகவல் அளிப்பதில்லை - மத்திய உள்துறை இணை அமைச்சர்