ETV Bharat / bharat

தோல்வியை மறைக்க நிதிஷ் குமாரை திட்டுவதா? எதிர்க்கட்சிகளுக்கு ஜனதா தளம் கேள்வி!

கோவிட் -19 பெருந்தொற்று, வெள்ள சூழ்நிலையை சமாளிக்க பிகார் அரசு ஒவ்வொரு நடவடிக்கையையும் எடுத்து வருவதாகக் கூறிய ஜனதா தளம் கட்சியின் செய்தித் தொடர்பாளர் ராஜிவ் ரஞ்சன், எதிர்க்கட்சிகள் தனது தோல்வியை மறைக்க மாநில அரசிடம் மட்டுமே கேள்வி எழுப்பிவருகின்றன என்றும் கூறினார்.

JD(U) spokesperson Nitish Kumar government food in bihar covid situation in bihar Rajiv Ranjan பிகார் வெள்ளம் பிகார் கோவிட்19 பாதிப்பு ஜனதா தளம் நிதிஷ் குமார் காங்கிரஸ் ராகுல் காந்தி ராஜிவ் ரஞ்சன்

author img

By

Published : Jul 22, 2020, 7:50 PM IST

பாட்னா: ஜனதா தளம் கட்சியின் செய்தித் தொடர்பாளர் ராஜீவ் ரஞ்சன் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில் மேலும் கூறுகையில், “கரோனா அல்லது வெள்ளம் இரண்டுமே எதிர்க்கட்சிக்கு கவலை அளிப்பவை அல்ல. அவர்கள் முதலமைச்சர் நிதிஷ் குமாரைத் தாக்கி தங்கள் தோல்வியை மறைக்க முயற்சிக்கிறார்கள்.

மாநிலத்தில் அழிந்து வரும் சுகாதார உள்கட்டமைப்பை நாங்கள் எவ்வாறு மீட்டு கொண்டு வந்தோம் என்பதை அவர்கள் கவனிக்க வேண்டும். தொற்றுநோயை சமாளிக்க மட்டுமல்ல, வெள்ளத்தை சமாளிக்கவும் பேரழிவு மேலாண்மை திட்டங்களை திறம்பட கையாண்டுவருகிறோம்.
பிகாரில் வெள்ளத்தின் நிலைமை கவலை அளிக்கிறது என்பதை நாங்கள் ஒப்புக்கொள்கிறோம். ஆனால் அதை சமாளிக்க மாநில அரசு தயாராக உள்ளது என்பதையும் கவனத்தில் கொள்ள வேண்டும்” என்றார்.

ராகுல் காந்தி கேள்விக்கு பதில்

இதையடுத்து மாநிலத்தில் கோவிட் -19 தொடர்பான மரணங்கள் குறித்து ராகுல் காந்தி கேள்வியெழுப்பியுள்ளாரே என்று செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினார்கள். அதற்கு பதிலளித்த ரஞ்சன், “பிகார் குறித்து கருத்து தெரிவிக்கும் முன் காங்கிரஸ் ஆட்சி செய்யும் மாநிலங்களின் நிலைமையை ராகுல் காந்தி கவனிக்க வேண்டும்” என்றார்.

மேலும், “காங்கிரஸ் ஆதரிக்கும் மகாராஷ்டிராவில் கோவிட்-19 பாதிப்பு நாட்டில் நாட்டில் நான்கில் ஒரு பங்காக உள்ளது. காங்கிரஸ் ஆட்சி செய்யும் பெரும்பான்மை மாநிலங்கள் இதனை கவனிக்க தவறியுள்ளன. இருப்பினும் அவர் பிகார் குறித்து கருத்து தெரிவிக்கிறார். நாட்டின் பழைமையான ஒரு பெரிய கட்சியின் மூத்தத் தலைவராக அவர் உள்ளார். கோவிட்-19 ஐ சமாளிக்க காங்கிரஸ் ஆளும் மாநிலங்கள் என்ன மாதிரிகளை பின்பற்றுகின்றன என்பது குறித்து பேச வேண்டிய பொறுப்பு அவருக்கு உள்ளது” என்றார்.

கரோனா பாதிப்பு

பிகாரில் கரோனா பாதிப்பாளர்கள் அதிகரித்துவருகின்றனரே என்ற கேள்விக்கு பதிலளித்த அவர், “கடந்த ஒரு வாரத்தில் பிகாரில் கோவிட்-19 பாதிப்புகள் அதிகரித்துள்ளன. இதனை நாம் பரந்த கண்ணோட்டத்தில் பார்த்தால், கடந்த 10 நாள்களில் கரோனா பாதிப்பு அதிகரித்துள்ள எட்டு மாநிலங்களில் பிகார் இல்லை என்பதை நாம் புரிந்துகொள்ளலாம்.

கோவிட்-19ஐ கட்டுப்படுத்துவது தொடர்பான எந்தவொரு ஆக்கப்பூர்வமான ஆலோசனைகளையும் நிதிஷ் குமார் அரசு நிராகரிக்கவில்லை. அனைத்து ஆக்கப்பூர்வ ஆலோசனைகளையும் அவர் பரிசீலித்துவருகிறார்.

முன்பை விட ஒரு சிறப்பான அமைப்பை ஏற்படுத்த நாங்கள் முயற்சிக்கிறோம். மாநிலம், மத்திய அரசின் விழிப்புணர்வுகளை விழிப்புடன் உணர்ந்தால், இந்தச் சூழ்நிலையை சமாளிக்க முடியும்” என்றார்.

இதையும் படிங்க: பிகார் பாஜக எம்.எல்.சி கோவிட்-19 பாதிப்பால் மரணம்!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.