மத்தியப் பிரதேச மாநிலம் ராஜ்கர் பகுதியைச் சேர்ந்தவர் 80 வயது முதியவர் லஷ்மி நாரயணன். இவர், தனக்கு ஏற்பட்ட உடல்நலக் குறைவு காரணமாக, சிகிச்சைபெற அருகிலுள்ள தனியார் மருத்துவமனையில் சேர்ந்துள்ளார்.
அம்மருத்துவமனை சிகிச்சைக் கட்டணமாக 22,000 ரூபாயை லக்ஷ்மி நாராயணனிடம் கோரியுள்ளது. அப்போது அவர் தன்னிடமிருந்த 11 ஆயிரம் ரூபாயை மட்டும் கட்டணமாக செலுத்தி, மேலும் செலுத்துவதற்கு தற்போது பணமில்லை எனத் தெரிவித்துள்ளார்.
இதையடுத்து, அவரைப் பிணைக்கைதி போல படுக்கையுடன் கட்டிவைத்து வெளியே விடாத மருத்துவமனை நிர்வாகம், ஐந்து நாள்களாக உணவு, குடிநீர் வழங்காமல் கொடூரமாகத் துன்புறுத்தியுள்ளனர். இதுகுறித்து அவரது மகள் ஷீலா பாய் பலமுறை முறையிட்டபோதும் மருத்துவமனை நிர்வாகம் செவிசாய்க்கவில்லை. பணத்தைக் கட்டாமல் நாராயணனை விட முடியாது எனத் தெரிவித்துள்ளது.
மருத்துவமனை நிர்வாகம் தனது நோயாளியை, கந்துவட்டி கும்பல்போல் கட்டிவைத்து பணம் வசூலித்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இதையும் படிங்க: முகக் கவசம் அணியாத நபரின் கழுத்தில் முழங்காலால் அழுத்திய ஜோத்பூர் காவலர்!