ETV Bharat / bharat

கொண்டாட்டத்திற்கான நேரம் அல்ல, மக்கள் துயர் துடைக்கும் நேரம் - ராஜஸ்தான் துணை முதலமைச்சர்

ஜெய்ப்பூர்: ஆட்சி அமைத்து ஆறாண்டுகள் ஆனதை முன்னிட்டு சமூக வலைதளங்கள் மூலம் பரப்புரை மேற்கொள்ள பாஜக திட்டமிட்ட நிலையில், இது கொண்டாட்டத்திற்கான நேரம் அல்ல, மக்கள் துயர் துடைக்கும் நேரம் என ராஜஸ்தான் துணை முதலமைச்சர் சச்சின் பைலட் விமர்சித்துள்ளார்.

சச்சின் பைலட்
சச்சின் பைலட்
author img

By

Published : May 28, 2020, 10:29 AM IST

மோடி தலைமையிலான பாஜக, 2014ஆம் ஆண்டு நடைபெற்ற மக்களவை தேர்தலில் வெற்றிப் பெற்று ஆட்சி அமைத்தது. இதனைத் தொடர்ந்து, 2019ஆம் ஆண்டு நடைபெற்ற தேர்தலிலும் வெற்றுப் பெற்று இரண்டாவது முறையாக மோடி பிரதமராக பதவியேற்றுக் கொண்டார். ஆட்சி அமைத்து ஆறாண்டுகள் ஆனதை முன்னிட்டு சமூக வலைதளங்கள் மூலம் பரப்புரை மேற்கொள்ள பாஜக திட்டமிட்டுவருகிறது. இதனை கடுமையாக விமர்சித்துள்ள ராஜஸ்தான் துணை முதலமைச்சர் சச்சின் பைலட், இது கொண்டாட்டத்திற்கான நேரம் அல்ல, மக்கள் துயர் துடைக்கும் நேரம் என கருத்து தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் மேலும் கூறுகையில், "இம்மாதிரியான நேரத்தில் மக்களுக்கு உதவி செய்ய வேண்டும். அதனை விட்டுவிட்டு ஆட்சி அமைத்து ஆறாண்டுகள் ஆனதை முன்னிட்டு சமூக வலைதளம் மூலம் பரப்புரை மேற்கொள்ள பாஜக திட்டமிட்டுவருகிறது. சாதனைகளை குறித்து பேசுவதற்கான நேரம் இது அல்ல. மக்களின் துயரை துடைப்பதற்கான நேரம். இம்மாதிரியான பேரிடர் காலத்தில், ஏழை மக்களுக்கு மத்திய அரசு உதவி செய்ய வேண்டும்.

ஊரடங்கின் காரணமாக மத்திய அரசு அறிவித்த திட்டங்கள் மக்களுக்கு சென்றடையவில்லை. ஏழை மக்களின் வங்கி கணக்குகளில் 10,000 ரூபாய் செலுத்த வேண்டும். சந்தையில் தேவையை அதிகரிக்க மக்களுக்கு பணம் வழங்குவது அவசியமாகிறது. எங்களின் கோரிக்கைகளுக்கு வலு சேர்க்கும் வகையில் சமூக வலைதளங்களில் பரப்புரை மேற்கொள்ளப்படும்" என்றார்.

இதையும் படிங்க: மேற்கு வங்க முதலமைச்சருக்கு ஆளுநர் அட்வைஸ்..!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.