ETV Bharat / bharat

கரோனா எதிர்ப்புப் போர் : கேரள அரசாங்கம் சிறந்த முன்னுதாரணமாக விளங்குகிறது!

author img

By

Published : May 11, 2020, 12:59 PM IST

திருவனந்தபுரம் : கோவிட்-19 பெருந்தொற்று நோய் பரவலைக் கட்டுப்படுத்தும் நடவடிக்கைகளில் கேரள முதலமைச்சர் பினராயி விஜயன் தலைமையிலான கேரள அரசாங்கம் சிறந்த முன்னுதாரணமாக செயலாற்றியுள்ளதாக கேரள ஆளுநர் ஆரிப் முகமது கான் பாராட்டியுள்ளார்.

No unnecessary delay will happen in bringing back expats, says Kerala Governor
கரோனா எதிர்ப்பு போர் : கேரள அரசாங்கம் சிறந்த முன்னுதாரணமாக விளங்குகிறது!

உலகளாவிய பெருந்தொற்று நோயாக மாறியுள்ள கரோனா வைரசின் தாக்கம் நாளுக்குநாள் இந்தியாவில் தீவிரமடைந்துவரும் நிலையில், கேரளாவின் அதன் பாதிப்பு வெகுவாக குறைந்துள்ளது. கேரள அரசின், கோவிட்-19 பரவல் தடுப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் காரணமாக இந்த நிலை ஏற்பட்டுள்ளது. இந்திய அளவில் கரோனா தடுப்பு, பாதிப்பு குறைப்பு நடவடிக்கைகளில் முதலமைச்சர் பினராயி விஜயன் தலைமையிலான கேரள அரசாங்கம் முன்னுதாரணமாக விளங்குகிறது.

இது தொடர்பாக ஈடிவி பாரத்திற்கு கேரள ஆளுநர் ஆரிப் முகமது கான் அளித்த சிறப்பு நேர்காணலில், ”கோவிட்-19 க்கு எதிரான போரை கேரள மாநில அரசு மிகவும் திறமையாக முன்னெடுத்து வருகிறது. இதுபோன்ற நெருக்கடி சூழ்நிலைகளில் தேவைப்படும் தலைமைத்துவ குணங்களை தான் கொண்டிருப்பதை பினராயி விஜயன் நிரூபித்துள்ளார்.

சுகாதார அமைச்சரும், பிற துறை அமைச்சர்களும் கூடுதல் நேரம் வேலை செய்து வருகின்றனர். கோவிட்-19 தடுப்புக்கான கேரளாவின் முயற்சிகளை உலகம் முழுவதும் பாராட்டுகிறது, ஏனெனில் இதுபோன்ற நெருக்கடியை கையாள இங்கு எங்களுக்கு நல்ல தலைமை இருக்கிறது. பெண்கள், தொழிலாளர்கள், கேரள காவல்துறை, மருத்துவர்கள், துப்புரவுப் பணியாளர்கள் உள்ளிட்ட பலரின் கடின உழைப்பும் இந்த போரில் மிக முக்கியமானது.

ஜனநாயக நாட்டில் அரசாங்கத்தை விமர்சிக்க எதிர்க்கட்சிகளுக்கு அனைத்து உரிமைகளும் உள்ளன. இருப்பினும், இத்தகைய கடும் நெருக்கடி நிலவும் சூழலில் அரசியல் விமர்சனங்களை முன்வைக்கக் கூடாது, அதற்கான நேரம் இதுவல்ல. மாறாக, எதிர்க்கட்சிகள் இப்போது அரசாங்கத்தின் பக்கம் நிற்க வேண்டும். எதிர்க்கட்சிகள் தங்களின் விமர்சனங்களை இந்த கட்டத்தில் முன்வைக்க வேண்டாம்.

வெளிநாடுகளில், குறிப்பாக வளைகுடாவில் சிக்கித் தவிக்கும் குடியுரிமை இல்லாத கேரளத்தவர்களை, ( வெளிநாடு வாழ் கேரளவர்கள் - என்.ஆர்.கே) அரசு சிறப்பு அக்கறையோடு கையாள்கிறது. உலகளாவிய பயணக்கட்டுப்பாடுகள் நிலவத் தொடங்கிய காலத்திலிருந்தே வெளிநாட்டவர்களை அழைத்து வருவதற்கான அனைத்து முயற்சிகளையும் அரசு மேற்கொண்டது.

ஈடிவி பாரத்திற்கு கேரள ஆளுநர் ஆரிப் முகமது கான் அளித்த சிறப்பு நேர்காணல்

வெளிநாட்டில் உள்ளவர்களை மீட்டுவருவதற்கு தேவையற்ற தாமதம் ஏற்படாது என்று நான் நம்புகிறேன். வந்தே பாரத் பணி எனும் பெயரில் இந்த நடவடிக்கை தொடங்கப்பட்டுள்ளது” என்றார்.

இதையும் படிங்க : அடுத்து என்ன? - முதலமைச்சர்களுடன் பிரதமர் இன்று ஆலோசனை

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.