இது தொடர்பாக மகாராஷ்டிரா அரசு வெளியிட்டுள்ள அறிக்கையில், "மாநிலத்தில் அலுவலக மொழியாக அலுவலர்கள் அனைவரும் மராட்டி மொழியை தான் பயன்படுத்த வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. அரசு சார்ந்த தகவல் தொடர்புகளில் மராட்டியை பயன்படுத்தாதவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க அந்தந்த துறைத் தலைவர்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.
மேலும், அவ்வாறு மராட்டி மொழியை பயன்படுத்தாதவர்களுக்கு வருடாந்திர ஊதிய உயர்வு கிடைக்காது" என குறிப்பிடப்பட்டுள்ளது.
மாநிலத்தில் பல துறைகள் ஆங்கில மொழியில் சுற்றறிக்கைகளையும் அரசாங்க அறிவிப்புகளை வெளியிடுவதை மாநில அரசு கவனித்ததையடுத்து இந்த அதிரடி நடவடிக்கை எடுத்துள்ளது.
முன்னதாக, மகாராஷ்டிராவில் உள்ள அனைத்துப் பள்ளிகளிலும் 1 முதல் 10ஆம் வகுப்புவரை மராட்டி மொழி கட்டாயப்பாடமாக வைக்கவேண்டும் என்ற சிறப்புச் சட்டம் நிறைவேற்றப்பட்டது.