கரோனா வைரஸ் காரணமாக, நாடு முழுவதும் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ள நிலையில், டெல்லி நிஜாமுதீன் பகுதியில் கூட்டம் ஒன்று நடைபெற்றது. இதில் இந்தியாவின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் மற்றும் மலேசியா, இங்கிலாந்து, சவூதி அரேபியா, ஆப்கானிஸ்தான் உள்ளிட்ட நாடுகளில் இருந்தும் சுமார் 1,700 பேர் கலந்து கொண்டனர்.
தடை உத்தரவு அமலில் இருக்கும்போதே, ஆயிரக்கணக்கானோர் பங்கேற்ற மத பிரசங்க கூட்டத்தை நடத்தி, கரோனா வைரஸ் பரவுவதற்குக் காரணமாக இருந்ததாக, டெல்லி நிஜாமுதீன் பகுதி ஜமாத் நிர்வாகம் மீது, காவல் துறை வழக்குப் பதிவு செய்தது.
இதில் பங்குகொண்டவர்களில் கணிசமான பேர், பின்னர் தங்கள் சொந்த ஊர்களுக்கு கிளம்பிச் சென்றனர். பல இடங்களில் வைரஸ் பரவுவதற்கு இந்தக் கூட்டம் காரணமாக இருந்ததாலும், விசா விதிமுறைகளை மீறி, பல பேர் இதில் பங்குபெற்றதாலும் 122 மலேசிய பிரஜைகளை டெல்லி காவல் துறை கைது செய்தது.
இந்நிலையில் 122 மலேசிய பிரஜைகளுக்கு டெல்லி நீதிமன்றம் பிணை வழங்கியுள்ளது. மேலும் அவர்களுக்கு 10 ஆயிரம் ரூபாய் நிவாரணமும் வழங்கப்பட்டது.
இதையும் படிங்க: தாசில்தார் கைது விவகாரத்தில் விதிமீறல்: நான்கு காவல்துறையினர் மீது நடவடிக்கை