ETV Bharat / bharat

இன்றைய நிகழ்வுகள் மற்றும் செய்திகளின் தொகுப்பு #ETVBharatNewsToday - pvnr

6 மாவட்டங்களில் முழு ஊரடங்கு, காங்கிரஸ் ஆர்ப்பாட்டம் என நீள்கிறது இன்றைய நிகழ்வுகள் மற்றும் செய்திகளின் தொகுப்பு.

news today 28th june
news today 28th june
author img

By

Published : Jun 28, 2020, 6:08 AM IST

6 மாவட்டங்களில் முழு ஊரடங்கு

தமிழ்நாட்டில் கரோனா பரவல் தீவிரமடைந்ததைத் தொடர்ந்து சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், செங்கல்பட்டு ஆகிய 4 மாவட்டங்களிலும் ஜூன் 21, ஜூன் 28 ஆகிய தேதிகளில் தளர்வின்றி முழு ஊரடங்கு கடைப்பிடிக்கப்படும் என தமிழ்நாடு அரசு அறிவித்திருந்தது. தற்போது மதுரை, தேனியிலும் நிலைமை மோசமாகியுள்ளதால், இந்த 6 மாவட்டங்களிலும் இன்று எவ்வித தளர்வுமின்றி முழு ஊரடங்கு கடைபிடிக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

6 மாவட்டங்களில் முழு ஊரடங்கு
6 மாவட்டங்களில் முழு ஊரடங்கு

பெட்ரோல், டீசல் விலை உயர்வை கண்டித்து காங்கிரஸ் ஆர்ப்பாட்டம்

பெட்ரோல், டீசல் விலை உயர்வு காரணமாக மத்திய அரசை கண்டித்து இன்று மாவட்ட வாரியாக ஆர்ப்பாட்டம் நடத்தப்படும் என தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் அழகிரி தெரிவித்திருந்தார். அதன்படி இன்று காங்கிரஸ் சார்பாக ஆர்ப்பாட்டம் நடைபெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.

கோலாகலமாக கொண்டாடப்படும் நரசிம்ம ராவ் பிறந்தநாள்

இன்று மறைந்த முன்னாள் பிரதமர் நரசிம்ம ராவின் பிறந்தநாள் கோலாகலமாக கொண்டாடப்படும் என தெலங்கானா முதலமைச்சர் சந்திரசேகர் ராவ் தெரிவித்துள்ளார். அதன்படி ஹைதராபாத் ஹுசைன் சாகர் ஏரிக்கரை அருகே நெக்லஸ் ரோட்டில் அமைந்துள்ள பிவி ஞான பூமியில் இவ்விழா நடைபெறும்.

நரசிம்ம ராவ் பிறந்தநாள்
நரசிம்ம ராவ் பிறந்தநாள்

இங்கிலாந்து பயணிக்கும் பாகிஸ்தான் அணி

கரோனா பாதிப்பு உள்ள வீரர்களைத் தவிர மற்ற பாகிஸ்தான் வீரர்கள் இன்று இங்கிலாந்து புறப்பட்டு செல்கின்றனர். அங்கு மூன்று டெஸ்ட், மூன்று 20 ஓவர் ஆட்டங்களை பாகிஸ்தான் ஆடவுள்ளது.

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.