மத்தியப் பிரதேச மாநிலம் ரய்சல்பூர் கிராம நெடுஞ்சாலையில் சென்று கொண்டிருந்த கார் எதிர்பாராத விதமாக விபத்துக்குள்ளானது. இதில் காரில் பயணித்த 4 ஹாக்கி வீரர்கள் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். மேலும் 3 பேர் படுகாயம் அடைந்துள்ளனர்.
காரில் பயணித்தவர்கள் இட்சாரியிலிருந்து ஹோசங்காபாத்திற்கு 'தியான் சந்திர டிராஃபி' விளையாடுவதற்காக சென்று கொண்டிருந்தனர். அவர்கள் அனைவரும் தேசிய அளவிலான ஹாக்கிப் போட்டியில் விளையாடுவதற்காக சென்று கொண்டிருக்கையில் இந்த கோர சம்பவம் நிகழ்ந்தது. விபத்தில் 4 ஹாக்கி வீரர்கள் உயிரிழந்த சம்பவம் பலரையும் அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது.
இதையும் படிங்க: அதிவேகமாக வந்த இருசக்கர வாகனம் விபத்து - இருவர் உயிரிழப்பு!