ETV Bharat / bharat

கிரண்பேடி மீது நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடருவேன் - புதுச்சேரி முதலமைச்சர்..!

புதுச்சேரி: அரசு அலுவலர்களை காவலர்களை போல் நடத்தி, மிரட்டி அராஜகத்தில் ஈடுபடும் துணைநிலை ஆளுநர் கிரண்பேடி மீது நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடருவேன் என முதலமைச்சர் நாராயணசாமி ஆவேசமாக தெரிவித்துள்ளார்.

Naraya
Naraya
author img

By

Published : Dec 1, 2019, 8:49 PM IST

புதுச்சேரியில் உள்ள தனது இல்லத்தில் செய்தியாளர்களை சந்தித்த முதலமைச்சர் நாராயணசாமி, "பல்வேறு மாநிலங்களில் தனது அதிகாரத்தை பயன்படுத்தி, ஜனநாயகத்தை தங்களின் காலில் போட்டு பாஜக மிதித்துள்ளது. ஆனால், பாஜகவின் முயற்சி மகாராஷ்டிராவில் தோல்வியடைந்திருக்கிறது.

இந்த விவகாரத்தில் ஜனநாயகத்தை காப்பாற்றிய உச்ச நீதிமன்றத்திற்கு நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன். உச்ச நீதிமன்ற உத்தரவை மீறி மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசுக்கு ஆளுநர் கிரண்பேடி தொல்லை கொடுத்துவருகிறார். அரசு அலுவலர்களை காவலர்களை போல் நடத்தியும் அவர்களை மிரட்டியும் அராஜகத்தில் ஈடுபட்டு வருகிறார். இது தொடர்பான வழக்கில் டிசம்பர் 11ஆம் தேதி உயர் நீதிமன்றத்தில் நல்ல முடிவு கிடைக்கும். இருப்பினும் உயர் நீதிமன்ற உத்தரவை மீறி செயல்பட்டு வரும் கிரண்பேடி மீது நானே நேரடியாக நீதிமன்ற அவமதிப்பு வழக்கை தொடருவேன்" என்றார்.

புதுச்சேரி மாநில முதலமைச்சர் நாராயணசாமி

தொடர்ந்து பெண்கள் பாதுகாப்பு குறித்து பேசிய நாராயணசாமி, "புதுச்சேரியில் பெண்கள் பாதுகாப்புக்கு முன்னுரிமை வழங்கும் வகையில் அவர்கள் அளிக்கும் புகார்களை தனிப்பிரிவு அமைத்து விசாரிக்க காவல்துறைக்கு உத்தரவிட்டுள்ளேன். கடந்த நான்கு தினங்களாக மாநிலம் முழுவதும் தொடர்ந்து கனமழை பெய்து வரும் நிலையில், மழை பாதிப்புகளை கண்காணிப்பதற்காக 24 மணிநேர கட்டுப்பாட்டு அறை திறக்கப்பட்டுள்ளது. மழை பாதிப்புகளை நிவர்த்தி செய்ய பேரிடர் மேலாண்மை துறை அலுவலர்களை களத்தில் இருக்குமாறு உத்தரவிட்டுள்ளேன்" என்றார்.

இதையும் படிங்க: முதலமைச்சர் அரியணையில் ஸ்டாலின் அமர்வார் - பாஜக துணை செயலாளர் அரசகுமார்

Intro:புதுச்சேரி அரசு அதிகாரிகளை போலீசார் போல் நடத்தியும், அவர்களை மிரட்டியும் அராஜகத்தில் ஈடுபடும் துணைநிலை ஆளுநர் கிரண்பேடி மீது நானே நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடருவேன் என முதலமைச்சர் நாராயணசாமி ஆவேசமாக தெரிவித்துள்ளார். Body:புதுச்சேரி:

புதுச்சேரி அரசு அதிகாரிகளை போலீசார் போல் நடத்தியும், அவர்களை மிரட்டியும் அராஜகத்தில் ஈடுபடும் துணைநிலை ஆளுநர் கிரண்பேடி மீது நானே நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடருவேன் என முதலமைச்சர் நாராயணசாமி ஆவேசமாக தெரிவித்துள்ளார். மேலும் மழை புதுச்சேரியில் பாதிப்புகளை கண்காணிக்க 24 மணிநேர கட்டுப்பாட்டு அறைகள் திறக்கப்பட்டிருப்பதாகவும் பேட்டி.

புதுச்சேரியில் உள்ள தனது இல்லத்தில் செய்தியாளர்களை சந்தித்த முதலமைச்சர் நாராயணசாமி, பல்வேறு மாநிலங்களில் தனது அதிகாரத்தை பயன்படுத்தி, ஜனநாயகத்தை தங்களின் காலில் போட்டு மிதித்து ஆட்சியமைத்து வந்த பாஜகவின் முயற்சி மகாராஷ்டிராவில் தோல்வியடைந்திருப்பதாகவும், இந்த விவகாரத்தில் ஜனநாயகத்தை காப்பாற்றிய உச்சநீதிமன்றத்திற்கு தனது நன்றியை தெரிவித்துக்கொண்ட முதலமைச்சர் நாராயணசாமி, உச்சநீதிமன்ற உத்தரவை மீறியும் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசுக்கு தொடர்ந்து தொல்லைகொடுத்து வரும் ஆளுநர் கிரண்பேடி, அரசு அதிகாரிகளையும், போலீசார்போல் நடத்தி அவர்களை மிரட்டி அராஜகத்தில் ஈடுபட்டு வருவதாக குற்றம்சாட்டினார். இது தொடர்பான வழக்கில் வரும் 11-ம் தேதி உயர்நீதிமன்றத்தில் நல்ல முடிவு கிடைக்கும் என எதிர்பார்ப்பதாகவும், இருப்பினும் உயர்நீதிமன்ற உத்தரவை மீறி செயல்பட்டு வரும் கிரண்பேடி மீது நானே நேரடியாக நீதிமன்ற அவமதிப்பு வழக்கை தொடருவேன் என ஆவேசமாக கூறினார்.

தொடர்ந்து பேசிய முதலமைச்சர் நாராயணசாமி, புதுச்சேரியில் பெண்கள் பாதுகாப்புக்கு முன்னுரிமை வழங்கும் வகையில் அவர்கள் அளிக்கும் புகார்களை தனிப்பிரிவு அமைத்து விசாரிக்க காவல்துறைக்கு உத்தரவிட்டுள்ளதாக கூறினார். மேலும் புதுச்சேரியில் ரவுடிகள் ஒருவரை ஒருவர் பழிவாங்கும் நோக்கில் கொலை சம்பவம் நடைபெற்று வரும் நிலையில் ரவுடிகள் மீது குண்டர் சட்டத்தை நடைமுறைப்படுத்த காவல்துறைக்கு உத்தரவிட்டுள்ளதாக கூறினார். மேலும் புதுச்சேரியில் கடந்த 4 தினங்களாக தொடர்ந்து கனமழை பெய்து வரும் நிலையில் மழை பாதிப்புகளை கண்காணிப்பதற்காக 24 மணிநேர கட்டுப்பாட்டு அறை திறந்திருப்பதாகவும், மழை பாதிப்புகளை நிவர்த்தி செய்ய பேரிடர் மேலாண்மை துறை அதிகாரிகளை களத்தில் இருக்குமாறு உத்தரவிட்டுள்ளதாக கூறினார்.

பேட்டி: நாராயணசாமி, முதலமைச்சர்.Conclusion:புதுச்சேரி அரசு அதிகாரிகளை போலீசார் போல் நடத்தியும், அவர்களை மிரட்டியும் அராஜகத்தில் ஈடுபடும் துணைநிலை ஆளுநர் கிரண்பேடி மீது நானே நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடருவேன் என முதலமைச்சர் நாராயணசாமி ஆவேசமாக தெரிவித்துள்ளார்.
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.