ETV Bharat / bharat

'மாநில விளையாட்டு வீரர்களுக்கு வாய்ப்பளிக்க வகை செய்க!' - நாம் தமிழர் கட்சி மனு - cm narayanasamy

புதுச்சேரி: 'கிரிக்கெட் அசோசியேஷன் ஆஃப் பாண்டிச்சேரி'யில் உள்ள முறைகேடுகளைக் களைந்து மாநில விளையாட்டு வீரர்களுக்கு வாய்ப்பளிக்க நாம் தமிழர் கட்சியினர் அம்மாநில முதலமைச்சர் நாராயணசாமியிடம் கோரிக்கை மனு ஒன்றை அளித்துள்ளனர்.

நாம் தமிழர் கட்சி மனு
author img

By

Published : Sep 24, 2019, 9:55 AM IST

புதுச்சேரி மாநிலம் நாம் தமிழர் கட்சி சார்பில் அக்கட்சியின் மாநிலச் செயலாளர் சிவக்குமார் தலைமையில் நேற்று புதுச்சேரி சட்டப்பேரவையில் முதலமைச்சர் நாராயணசாமியை சந்தித்து மனு ஒன்றை அளித்தனர்.

அந்த மனுவில், “பாண்டிச்சேரி கிரிக்கெட் அசோசியேஷன் (PCA) 1968ஆம் ஆண்டு புதுச்சேரி மாநில விளையாட்டு ஆணையத்தில் 36 அணிகளும் 720 விளையாட்டு வீரர்களும் உறுப்பினர்களாக பதிவு செய்யப்பட்டு தொடர்ந்து செயல்பட்டுவருகிறது.

ஆனால் புதுச்சேரி மாநிலத்தில் வசித்துவரும் தனியார் முதலாளிகளால் உருவாக்கப்பட்ட கிரிக்கெட் அசோசியேஷன் ஆஃப் பாண்டிச்சேரி (CAP) பல்வேறு முறைகேடுகள் மூலம் புதுச்சேரி மாநில விளையாட்டு ஆணையத்தில் பதிவு செய்யப்பட்டுள்ளது.

2008 முதல் 2018 வரை புதுச்சேரி மாநில ஆணையத்திற்கும் கிரிக்கெட் அசோசியேஷன் ஆஃப் பாண்டிச்சேரிக்கும் எவ்வித கிரிக்கெட் போட்டிகளையும் நடத்தாமல் சட்டவிரோதமாக பதிவு செய்யப்பட்டுள்ளது.

புதுச்சேரி மாநிலத்தில் அரசுப் பள்ளிகள், அரசுக் கல்லூரியில் படித்த கிரிக்கெட் வீரர்களில் ஒருவருக்கும் கிரிக்கெட் பாண்டிச்சேரி அணியில் விளையாட அனுமதிக்காமல், வடமாநில வீரர்களுக்கு பொய்யான போலி ஆவணங்கள், சான்றிதழ்களைப் பெற்றுத்தந்து விளையாடும் வாய்ப்பினை உருவாக்கி கிரிக்கெட் அசோசியேஷன் ஆஃப் பாண்டிச்சேரி நிர்வாகிகள் புதுச்சேரி மண்ணின் மைந்தர்களுக்கு துரோகத்தைச் செய்துள்ளது” என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

நாம் தமிழர் கட்சி முதலமைச்சர் நாராயணசாமியிடம் கோரிக்கை மனு அளித்தபோது

எனவே, கிரிக்கெட் அசோசியேஷன் ஆஃப் பாண்டிச்சேரி பதிவினை ரத்து செய்து புதுச்சேரி மாநிலம் விளையாட்டு ஆணையம் ஏற்று நடத்த வேண்டும் என்றும் நாம் தமிழர் கட்சியினர் முதலமைச்சர் நாராயணசாமியிடம் வலியுறுத்தியுள்ளனர்.

Intro:புதுச்சேரி மாநில கிரிக்கெட் விளையாட்டு அணியில் மண்ணின் மைந்தர்களுக்கு வாய்ப்பளிக்க வேண்டும், கிரிக்கெட் அசோசியேஷன் ஆப் பாண்டிச்சேரி முறைகேடு நாம்தமிழர்கட்சி முதல்வரிடம் மனு

Body:புதுச்சேரி மாநிலம் நாம் தமிழர் கட்சி சார்பில் அக்கட்சி மாநிலச் செயலாளர் சிவக்குமார் தலைமையில் கட்சியினர் இன்று புதுச்சேரி சட்டப்பேரவையில் முதல்வர் நாராயணசாமி சந்தித்து மனு ஒன்றை அளித்தனர் அதில்

பாண்டிச்சேரி கிரிக்கெட் அசோசியேஷன்(PCA) 1968 ஆம் ஆண்டு புதுச்சேரி மாநில விளையாட்டு ஆணையத்தில் 36 அணிகள் மற்றும் 720 விளையாட்டு வீரர்கள் உறுப்பினர்களாக பதிவு செய்யப்பட்டு தொடர்ந்து செயல்பட்டு வருகிறது என்றும்

ஆனால் புதுச்சேரி மாநிலத்தில் வசித்து வரும் தனியார் முதலாளிகளால் உருவாக்கப்பட்ட கிரிக்கெட் அசோசியேஷன் ஆப் பாண்டிச்சேரி(CAP) பல்வேறு முறைகேடுகள் மூலம் புதுச்சேரி மாநில விளையாட்டு ஆணையத்தில் பதிவு செய்யப்பட்டுள்ளது என்றும் 2008 முதல் 2018 வரை புதுச்சேரி மாநில ஆணையத்திற்கும் கிரிக்கெட் அசோசியேஷன் ஆப் பாண்டிச்சேரி க்கும் எவ்வித கடித தொடர்பு கிரிக்கெட் போட்டிகளை நடத்தாமல் சட்டவிரோதமாக பதிவு செய்யப்பட்டுள்ளது என்றும் நாம் தமிழர் கட்சி அளித்துள்ள மனுவில் அக்கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது

புதுச்சேரி மாநிலத்தில் அரசு பள்ளிகளிலும் அரசு கல்லூரியில் படித்த கிரிக்கெட் வீரர்களில் ஒருவருக்கும் கிரிக்கெட் பாண்டிச்சேரி அணியில் விளையாட அனுமதிக்காமல் வடமாநில வீரர்களுக்கு பொய்யான போலி ஆவணங்கள் சான்றிதழ் பெற்று தந்து விளையாட வாய்ப்பினை உருவாக்கி கிரிக்கெட் அசோசியேஷன் ஆப் பாண்டிச்சேரி நிர்வாகிகள் புதுச்சேரி மண்ணின் மைந்தர்களுக்கு துரோகத்தை செய்துள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது எனவே இந்த அணியில் பதிவு செய்துள்ள வெளிமாநில விளையாட்டு வீரர்களை உடனே வெளியேற்றவும் அசோசியேசன் நிர்வாகிகள் மீது இது தொடர்பான குற்ற நடவடிக்கைகள் மேற்கொள்ள வேண்டும் மேலும் தனியார் முதலாளிகள் நடத்தும் கிரிக்கெட் அசோசியேசன் ஆப் பாண்டிச்சேரி பதிவினை ரத்து செய்து புதுச்சேரி மாநிலம் விளையாட்டு ஆணையம் ஏற்று நடத்த வேண்டும் என்றும் நாம் தமிழர் கட்சி வினர் இக்கோரிக்கைகளை அடங்கிய மனுவினை முதல் நாராயணசாமியும் சந்தித்தபோது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி அளித்தனர்

Conclusion:புதுச்சேரி மாநில கிரிக்கெட் விளையாட்டு அணியில் மண்ணின் மைந்தர்களுக்கு வாய்ப்பளிக்க வேண்டும், கிரிக்கெட் அசோசியேஷன் ஆப் பாண்டிச்சேரி முறைகேடு நாம்தமிழர்கட்சி முதல்வரிடம் மனு
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.