ETV Bharat / bharat

வண்ணாரப்பேட்டை தாக்குதலுக்குக் கண்டனம் தெரிவித்து புதுச்சேரியில் பல இடங்களில் இஸ்லாமியர்கள் ஆர்ப்பாட்டம் - washermanpet caa protest

புதுச்சேரி: வண்ணாரப்பேட்டையில் சிஏஏ எதிர்ப்பு போராட்டத்தில் இஸ்லாமியர்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்டதற்கு எதிர்ப்புத் தெரிவித்து புதுச்சேரியில் பல இடங்களில் போராட்டம் நடைபெற்றது.

muslims
muslims
author img

By

Published : Feb 15, 2020, 4:30 PM IST

சென்னை வண்ணாரப்பேட்டையில், குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு எதிராகப் போராட்டம் நடத்திய இஸ்லாமியர்கள் மீது காவல் துறையினர், நேற்று தடியடி நடத்தினர். இதனைக் கண்டித்து, புதுச்சேரியின் பல இடங்களில் இஸ்லாமியர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

அதேபோல் புதுச்சேரி புறநகர் பகுதிகளிலும், தமிழ்நாடு காவல் துறையினரைக் கண்டித்து இஸ்லாமியர்கள், மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். குறிப்பாக, புதுச்சேரி வில்லியனூர் எம்ஜிஆர் சிலை அருகில் இரண்டு ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

புதுச்சேரியில் பல இடங்களில் இஸ்லாமியர்கள் ஆர்ப்பாட்டம்

இதேபோல் கோட்டக்குப்பம் ரவுண்டானா பகுதி, உருளையன்பேட்டை, மறைமலை அடிகள் சாலை என பல்வேறு இடங்களில் இஸ்லாமியர்களுக்கு ஆதரவாக பொதுமக்கள், அரசியல் கட்சியினர் எனப் பலரும் சாலை மறியல் உள்ளிட்ட ஆர்ப்பாட்டங்களில் ஈடுபட்டதால் பெரும்பலான பகுதிகளில் பதட்டம் நீடித்தது.

இதையும் படிங்க: வண்ணாரப்பேட்டையில் இஸ்லாமியர் மீது தாக்குதல்: டிடிவி தினகரன் கண்டனம்

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.