மும்பை: கடந்த திங்கள்கிழமை பதிவாளர் அலுவலகத்தில் பணி செய்யும் கூட்டுறவு சங்கங்களுக்கான முதல் தரவரிசை உயர் அலுவலரும் அவரது மகனும் சேலைகளையும் பணத்தையும் அன்பளிப்பாக பெற்றதால், லஞ்ச ஒழிப்புத் துறையினரால் கைது செய்யப்பட்டனர்.
முதல் தரவரிசை உயர் அலுவலரும் அவரது மகனும் 2 லட்சம் ரூபாயையும் சேலைகளையும் லஞ்சமாக பெற்றதாக குற்றம் சாட்டப்பட்டது.
இது குறித்து லஞ்ச ஒழிப்புத்துறையினர் வெளியிட்டுள்ள அறிக்கையின்படி, 'மும்பை கண்டிவலி கிழக்குப்பகுதியில் இருக்கும் பதிவாளர் அலுவலகத்தில் பணிசெய்யும் கூட்டுறவு சங்கங்களுக்கான 57 வயதுடைய அந்த முதல் தரவரிசை அலுவலரின் பெயர் பரத் காக்டே. அவரும் அவரின் மகனுமான சச்சின் காக்டேவும் கையூட்டு பெற்றதற்காக கைதுசெய்யப்பட்டுள்ளனர்.
இதுகுறித்து காக்டே அளித்தப் புகாரின்பேரில், ரோலக்ஸ் அடுக்குமாடி குடியிருப்புகளின் தலைவர் விசாரணைக்குட்படுத்தப்பட்டுள்ளார்.
இந்த லஞ்சப்புகாரில் அடுக்குமாடி குடியிருப்புகளின் தலைவர், பதிவாளர் அலுவலகத்தில் தனது முன் வைப்பு நிதியை கேட்டுள்ளார். இதற்கு பரத் காக்டே அனுமதி தருவதற்காக, ரூ.2 லட்சம் ரொக்கமும்; ரூ.7 ஆயிரத்து 595 மதிப்புள்ள 2 சேலைகளையும் அன்பளிப்பாகத் தரவேண்டும் என்று கேட்டிருக்கிறார். இதைத் தொடர்ந்து அடுக்குமாடி குடியிருப்புகளின் தலைவரும் அவரது சகாக்களும் இது தொடர்பாக அன்பளிப்புகளைத் தருவதற்கு முன்பு, லஞ்ச ஒழிப்புத் துறையினரிடம் புகாரும் கொடுத்துள்ளனர். இதைத் தொடர்ந்து அன்பளிப்பினைப் பெற முயன்றபோது தந்தை, மகன் இருவரும் கைதுசெய்யப்பட்டனர்.
இதுகுறித்து வழக்குப் பதிவு செய்த லஞ்ச ஒழிப்புத்துறையினர், புகாரளிக்கப்பட்டவரிடம் விசாரித்தபோது, பரத் காக்டேவும் அவரது மகனும் கையூட்டு பெற முயற்சித்ததை ஒத்துக்கொண்டனர்.
தந்தை, மகன் இருவர் மீதும் ஊழல் தடுப்புச்சட்டத்தின் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது.
இதையும் படிங்க: 'இந்திய - சீன மோதலை தணிக்க ஸ்புட்னிக் வி ஒரு சிறந்த வாய்ப்பு'