தீபாவளி பண்டிகையை முன்னிட்டு பங்குச் சந்தையில் 'முஹுரத் டிரேடிங்' (muhurat trading) இன்று மாலை தொடங்குகிறது. தீபாவளி பண்டிகை போன்ற சிறப்பு தினங்களில் 'முஹுரத் டிரேடிங்' பங்குச் சந்தையில் திறக்கப்படும்.
தேசிய பங்குச் சந்தையில் இன்று விடுமுறை தினமாக இருந்தாலும் ஒரு மணி நேரம் மட்டும் சந்தையை திறந்து வைப்பார்கள். சந்தையை பொறுத்தவரை இன்று பங்குகளை வாங்க மட்டுமே செய்வார்கள். பங்குகளை விற்க மாட்டார்கள்.
பங்குகளை விற்கக்கூடாது என்பதால் ட்ரேடர்கள்கூட சந்தையிலிருந்து இன்று ஒதுங்கிவிடுவார்கள். இந்த 'முஹுரத் டிரேடிங்’ போது புள்ளிகள் அதிகரிக்க வாய்ப்புள்ளதால் பலரும் இந்த தினங்களில் பங்குகளை வாங்கு ஆர்வம்காட்டுவார்கள்.
தேசிய பங்குச் சந்தை (National Stock Exchange) ஆகியவற்றில் முஹுரத் வர்த்தகம் இன்று மாலை 6.15 மணி முதல் மாலை 7.15 மணி வரை ஒரு மணி நேரம் திறந்திருக்கும். ஐ.சி.ஐ.சி.ஐ வங்கி, எல் அண்ட் டி ஆகியவற்றின் பங்குகளை வாங்க முதலீட்டாளர்கள் இன்று ஆர்வம்காட்டுவார்கள் என்று கூறப்படுகிறது.
அதுமட்டுமின்றி லார்சன் - டூப்ரோ, பேஜ் இண்டஸ்ட்ரீஸ், பிரெஸ்டீஜ் எஸ்டேட்ஸ், விஐபி நிறுவனத்தின் பங்குகளையும் முதலீட்டாளர்கள் வாங்க அதிக வாய்ப்புள்ளதாகத் தெரிகிறது.
இதையும் படிங்க: ஆன்லைன் ரம்மி தளத்தின் விளம்பரத் தூதரான காஜல் அகர்வால்!