பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அமைச்சரவை ஜம்மு-காஷ்மீர் மற்றும் லடாக் மத்திய பிரதேசங்களுக்கு 520 கோடி ரூபாய் சிறப்பு தொகுப்புக்கு ஒப்புதல் அளித்தது. இது ஐந்து ஆண்டிற்கு இரு யூனியன் பிரதேசங்களில் உள்ள தீனதயாள் அந்தியோதயா யோஜனா - தேசிய கிராமப்புற வாழ்வாதாரத் திட்டத்திற்கான (DAY-NRLM) நிதி ஒதுக்கீட்டை வறுமை விகிதத்துடன் இணைக்காமல் கோரிக்கை அடிப்படையில் இயக்கப்படுகிறது.
தேசிய கிராமப்புற வாழ்வாதாரத் திட்டம் என்பது மத்திய அரசின் திட்டமாகும். இது நாடு முழுவதும் உள்ள கிராமப்புற ஏழை குடும்பங்களுக்கு பல வாழ்வாதாரங்களை மேம்படுத்துவதன் மூலம் கிராமப்புற வறுமையை ஒழிப்பதை நோக்கமாகக் கொண்டு செயல்படுத்தப்பட்டு வருகிறது.
இதுகுறித்து மத்திய அரசு கூறுகையில், '' இது இரு யூனியன் பிரதேசங்களுக்கும் போதுமான நிதியை அளிக்கிறது. அதேபோல் ஜம்மு - காஷ்மீர் மக்களுக்கு மத்திய அரசின் அனைத்து பயன்களும் குறிப்பிட்ட காலத்திற்கு சென்றடைய வைப்பதே அரசின் நோக்கமாகும்'' என தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், ஜம்மு - காஷ்மீரில் உள்ள கிராமப்புற மக்களின் வாழ்வாதாரத்தையும், மகளிர் முன்னேற்றத்தையும் கணக்கில் கொண்டு திட்டம் வகுக்கப்பட்டுள்ளதாக கூறப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: ஹத்ராஸில் தொடரும் கொடூரம் : பாலியல் வன்புணர்வுக்குள்ளான குழந்தை