கரோனா பரவலைத் தடுக்க நாடு முழுவதும் இரண்டாம் கட்ட ஊரடங்கு உத்தரவு அமலில் உள்ளது. இந்நிலையில், உத்தர பிரதேசம் மாநிலம் அலிகார் மாவட்டம் போஜ்புரா பகுதியில் உள்ள காய்கறி சந்தையில் அத்தியாவசியப் பொருள்கள் வாங்க பொதுமக்கள் அதிக அளவில் குவிந்தனர்.
இதனால், காய்கறி, மளிகை பொருள்கள் உள்ளிட்ட அத்தியாவசியப் பொருள்கள் விற்பனை செய்யும் கடைகளை மூடுமாறு காவல் துறையினர் வலியுறுத்தி வந்தனர். அப்போது அங்கு வந்த அடையாளம் தெரியாத கும்பல், காவல் துறையினர் மீது கல் வீசி சரமாரியாகத் தாக்கியது. அதில், காவலர் ஒருவர் பலத்த காயமடைந்தார்.
இது குறித்து காவல் அலுவலர் செய்தியாளர்களிடம் கூறுகையில், "காவல் துறையினர் மீது தாக்குதல் நடத்திய அடையாளம் தெரியாத கும்பலை தேடி வருகிறோம். அந்த கும்பல் பிடிபட்டால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும்" எனத் தெரிவித்தார்.
இதையும் படிங்க: பெற்ற குழந்தைகளை கொன்று தற்கொலை செய்து கொண்ட தாய்!