உலகின் மிகப்பெரிய சுரங்கப்பாதைத் திட்டமான அடல் சுரங்கப்பதைத் திட்டதை பிரதமர் நரேந்திர மோடி அக்டோபர் கடந்த 3ஆம் தேதி தொடங்கி வைத்தார். கோவிட்-19 பரவலுக்குப் பின்னர் பிரதமர் நரேந்திர மோடி பங்கேற்ற முதல் அரசு விழா இதுவாகும்.
இதில் பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், மத்திய இணை அமைச்சர் அனுராக் தாக்கூர், இமாச்சலப் பிரதேச மாநில முதலமைச்சர் ஜெய்ராம் தாக்கூர் உள்ளிட்டோரும் பங்கேற்றனர்.
இந்நிலையில், இவ்விழாவில் பங்கேற்ற பாஜக சட்டப்பேரவை உறுப்பினர் சுரேந்திரா ஷோரிக்கு கரோனா பாதிப்பு தற்போது உறுதி செய்யப்பட்டுள்ளது. இவர் கடந்த அக்டோபர் 1ஆம் தேதி தன்னை கரோனா பரிசோதனைக்கு உட்படுத்திக் கொண்டார். ஆனால் பரிசோதனையின் முடிவு குறித்து தெரிவதற்கு முன்னரே விழாவில் கலந்துகொண்டுள்ளார். இது கரோனா விதிமுறைகளை மீறிய செயலாகும்.
பிரதமர் உள்ளிட்ட முன்னணித் தலைவர்கள் பங்கேற்கும் விழாவில் பாஜக சட்டப்பேரவை உறுப்பினர் ஒருவரே இதுபோன்ற செயலில் ஈடுபட்டுள்ளது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. எம்.எல்.ஏ சுரேந்திராவுடன் நேரடித் தொடர்பில் இருந்த இமாச்சலப் பிரதேச முதலமைச்சர் தற்போது தன்னைத் தனிமைப்படுத்திக் கொண்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: இந்திய இறையாண்மையை காக்க தயார் நிலையில் விமானப்படை - ஆர்.கே.எஸ் பந்தௌரியா