உலகளவில் பிரபலமான சீனாவின் டிக் டாக் செயலிக்கு, இந்திய அரசு சமீபத்தில் தடை விதித்தது. அமெரிக்கா உள்ளிட்ட பல நாடுகளில் டிக் டாக் செயலிக்குத் தடை விதிக்கப்படும் என தகவல் வெளியானது. இதனிடையே, மைக்ரோசாப்ட் நிறுவனம் டிக் டாக் செயலியை வாங்குவது தொடர்பாக பேச்சுவார்த்தை நடத்திவந்தது.
செப்டம்பர் 15ஆம் தேதிக்குள் இறுதிக்கட்ட பேச்சுவார்த்தை முடிவுக்கு வரும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், டிக் டாக் செயலியை மைக்ரோசாப்ட் நிறுவனம் வாங்குவதற்கு 20 விழுக்காட்டிற்கு குறைவாகவே வாய்ப்புகள் உள்ளன என தகவல் வெளியாகியுள்ளது. மிகக் குறைந்த விலைக்கு ஒப்பந்தத்தை மேற்கொள்ள மைக்ரோசாப்ட் நிறுவனம் விண்ணப்பித்திருந்தது.
அதுமட்டுமின்றி, ட்விட்டர் நிறுவனம் டிக் டாக் செயலியின் அமெரிக்க உரிமையை வாங்க முயற்சிப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. ஆனால், இத்தகவலை ட்விட்டர் தரப்பில் அதிகாரப்பூர்வமாக உறுதிப்படுத்தவில்லை. இரண்டு ஜாம்பவான்கள் டிக் டாக் செயலியை வாங்கும் போட்டியில் களமிறங்கியுள்ளன.
![TikTok](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/8374146_info.png)