டெங்கு நோயிலிருந்து பாதுகாத்துக்கொள்ள அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டுவருகிறது. அதன் ஒரு பகுதியாக லாஸ்பேட்டையிலுள்ள அரசு தொடக்கப் பள்ளியில் பயிலும் 200க்கும் மேற்பட்ட மாணவ மாணவிகளுக்கு நிலவேம்பு குடிநீர் வழங்கும் நிகழ்ச்சி பள்ளி வளாகத்தில் நடைபெற்றது.
இதில் சிறப்பு அழைப்பாளராக பாஜக சட்டப்பேரவை உறுப்பினர் சாமிநாதன் கலந்துகொண்டு நிலவேம்பு குடிநீர் வழங்கும் நிகழ்ச்சியை தொடங்கிவைத்தார்.
பள்ளியின் தலைமை ஆசிரியை லட்சுமி நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை செய்திருந்தார். மேலும் நிகழ்ச்சியில், பள்ளி ஆசிரியைகள் பவித்ரா, மீனாட்சி, லாவண்யா ஆசிரியர்கள் சுரேஷ், வடிவேலு உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.
இதையும் படிங்க: சென்னையில், வணிகர் சங்க பேரமைப்பு சார்பில் நில வேம்பு குடிநீர் முகாம்.!