சத்தீஸ்கர் மாநிலத்தின் தண்டேவாடா மாவட்டத்தில் கடந்த 9ஆம் தேதி நக்சல்கள் நடத்திய தாக்குதலில் பாஜக எம்எல்ஏ பீமா மண்டவி உட்பட 6 பேர் கொல்லப்பட்டனர்.
கடந்த 18ஆம் தேதி இந்த தாக்குதலில் ஈடுபட்ட இரண்டு நக்சல்களை சத்தீஸ்கரின் தனிக்கர்கா (Dhanikarka) வனப்பகுதியில் பாதுகாப்பு படையினர் சுட்டு வீழ்த்தினர்.
இந்நிலையில், இன்று காலை நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூட்டில் தண்டேவாடா தாக்குதலுக்கு மூளையாக செயல்பட்ட நக்சல் மட்வி முய்யாவை (Madvi Muyya) பாதுகாப்பு படையினர் சுட்டுக்கொன்றனர்.