தெலங்கானா முலுகு பகுதியைச் சேர்ந்தவர் சீதக்கா. மாவோயிஸ்ட் அமைப்பைச் சேர்ந்த இவர், அந்த அமைப்பிலிருந்து விலகி, ஜனநாயக பாதைக்குத் திரும்பினார்.
இதையடுத்து காங்கிரஸ் கட்சியில் இணைந்து, அத்தொகுதி சட்டப்பேரவை உறுப்பினர் ஆனார். இந்நிலையில் முழு அடைப்பு காலத்தில், ஏழைகளுக்கு உதவுவதோடு தனது தொகுதியின் பழங்குடிப் பகுதிகளில் வசிக்கும் மக்களுக்கு உணவு தானியங்கள், காய்கறிகள் மற்றும் பிற அத்தியாவசியப் பொருள்களையும் விநியோகித்து வருகிறார்.
இந்த காங்கிரஸ் எம்.எல்.ஏ கிட்டத்தட்ட 30 ஆயிரம் கிலோகிராம் அரிசி, மற்றும் காய்கறிகள், பருப்பு வகைகள், எண்ணெய் மற்றும் பிற அத்தியாவசியப் பொருள்களை பழங்குடியினருக்கும், முலுகுவில் வசிக்கும் மற்றவர்களுக்கும் விநியோகித்து வருகிறார்.
இது பற்றி சீதக்கா கூறுகையில், 'கடந்த 36 நாட்களாக, மாநிலத்தின் 296 கிராமங்களுக்குத் தனிப்பட்ட முறையில் சென்று அரிசி, காய்கறிகள் மற்றும் அத்தியாவசியப் பொருட்களை ஏழை மக்களுக்கு வழங்கி வருகிறேன். எனது கட்சிப் பணியாளர்கள் அத்தியாவசியப் பொருள்களை மேலும் 60 கிராமங்களில் விநியோகித்துள்ளனர்.
இதுவரை, நாங்கள் மொத்தம் 356 கிராமங்களுக்குச் சென்றுள்ளோம். சுமார் 600 கிராமங்களைக் கொண்ட முலுகு சட்டப்பேரவை தொகுதி மிகப்பெரிய தொகுதியாகும். இங்கு பெரும்பாலான பகுதி வனம் மற்றும் பழங்குடிப் பகுதிகளாக உள்ளன. எனது தொகுதியில் உள்ள ஏழை மக்களின் பட்டினியை நிறைவேற்றுவதற்காக, நான் சமீபத்தில் 'பசியை விரட்டுவோம்' என்ற பரப்புரையைத் தொடங்கினேன். முழு ஊரடங்கு முடியும் வரை இதைத் தொடருவேன்' என்றார்.
-
People asked me for help when I was a naxal but now viallges are reaching me for help from all over the state 5000 Rs to poor is they demand. @INCIndia @MahilaCongress @RahulGandhi @priyankagandhi @sushmitadevinc @INCTelangana @jothims @kumari_selja #humegarvhai @TelanganaCMO pic.twitter.com/RZJL3AGoRS
— Danasari Anasuya (Seethakka) (@seethakkaMLA) April 23, 2020 " class="align-text-top noRightClick twitterSection" data="
">People asked me for help when I was a naxal but now viallges are reaching me for help from all over the state 5000 Rs to poor is they demand. @INCIndia @MahilaCongress @RahulGandhi @priyankagandhi @sushmitadevinc @INCTelangana @jothims @kumari_selja #humegarvhai @TelanganaCMO pic.twitter.com/RZJL3AGoRS
— Danasari Anasuya (Seethakka) (@seethakkaMLA) April 23, 2020People asked me for help when I was a naxal but now viallges are reaching me for help from all over the state 5000 Rs to poor is they demand. @INCIndia @MahilaCongress @RahulGandhi @priyankagandhi @sushmitadevinc @INCTelangana @jothims @kumari_selja #humegarvhai @TelanganaCMO pic.twitter.com/RZJL3AGoRS
— Danasari Anasuya (Seethakka) (@seethakkaMLA) April 23, 2020
சீதக்கா அத்தொகுதியில் இரண்டு முறை சட்டப்பேரவை உறுப்பினராக இருந்துள்ளார். முன்னாள் மாவோயிஸ்டாக இருந்த சீதக்கா சட்டம் பயின்று, வாரங்கல் நீதிமன்றத்தில் வழக்குரைஞர் பயிற்சி பெற்றவர் ஆவார்.
-
30 days of #corona help we have distributed almost 25000 kgs of rice same way vegetables,oil,dal etc it wil go on until this #coronavirus end. @INCIndia @MahilaCongress @RahulGandhi @priyankagandhi @sushmitadevinc @ShashiTharoor @jothims @kumari_selja @revanth_anumula @MYaskhi pic.twitter.com/PXYJoQWMKH
— Danasari Anasuya (Seethakka) (@seethakkaMLA) April 24, 2020 " class="align-text-top noRightClick twitterSection" data="
">30 days of #corona help we have distributed almost 25000 kgs of rice same way vegetables,oil,dal etc it wil go on until this #coronavirus end. @INCIndia @MahilaCongress @RahulGandhi @priyankagandhi @sushmitadevinc @ShashiTharoor @jothims @kumari_selja @revanth_anumula @MYaskhi pic.twitter.com/PXYJoQWMKH
— Danasari Anasuya (Seethakka) (@seethakkaMLA) April 24, 202030 days of #corona help we have distributed almost 25000 kgs of rice same way vegetables,oil,dal etc it wil go on until this #coronavirus end. @INCIndia @MahilaCongress @RahulGandhi @priyankagandhi @sushmitadevinc @ShashiTharoor @jothims @kumari_selja @revanth_anumula @MYaskhi pic.twitter.com/PXYJoQWMKH
— Danasari Anasuya (Seethakka) (@seethakkaMLA) April 24, 2020
தெலங்கானாவில் மக்கள் அனைவரும் முகக்கவசம் அணிய வேண்டும் என்ற பிரச்னையை எழுப்பிய சட்டப்பேரவை உறுப்பினர்களில் இவரும் ஒருவர் என்பது நினைவுகூரத்தக்கது.
இதையும் படிங்க: மாவோயிஸ்டுகள் என சந்தேகிக்கப்படும் நபர்களின் வீட்டில் என்.ஐ.ஏ. அலுவலர்கள் சோதனை!