ETV Bharat / bharat

கண்ணூர் பகுதியில் மாவோயிஸ்டுகள் நடமாட்டம்!

திருவனந்தபுரம்: கேரள மாநிலம் கண்ணூர் பகுதியில் ஆயுதம் ஏந்திய மாவேயிஸ்டுகள் நடமாட்டம் இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

கேரளாவில் மாவோயிஸ்டுகள் நடமாட்டம்
maoist presence in Kerala
author img

By

Published : Jan 20, 2020, 7:39 PM IST

கேரளாவின் கண்ணூர் மாவட்டத்தை அடுத்துள்ள அம்பயதோட் பகுதியில் மாவோயிஸ்டுகள் நடமாட்டம் இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்த மாவோயிஸ்டுகள் குழுவில் மூன்று ஆண்களும், ஒரு பெண்ணும் இருப்பதாக கூறப்படுகிறது.

இந்தக் குழுவினர் அப்பகுதியில் உள்ள பொதுமக்களிடம் துண்டு பிரசுரங்களை வழங்கியுள்ளனர். அதில், "அட்டபாடியில் காவல் துறையினர் நடத்திய தாக்குதலுக்கும் அங்கு சிந்தப்பட்ட ரத்தத்திற்கு மோடி - பிரானாயி அரசு பதில் சொல்லியே தீர வேண்டும்" என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

மேலும், மாவோயிஸ்டுகளுக்கு எதிராக நடத்தப்பட்ட ஆபரேஷன் சமதன் தாக்குதலுக்கு எதிராக ஜனவரி 31ஆம் தேதி நாடு தழுவிய கடையடைப்பு போராட்டத்திற்கும் அழைப்புவிடுத்துள்ளனர். இதை சுவரொட்டிகளாகவும் மாவோயிஸ்டுகள் ஆங்காங்கே ஒட்டியுள்ளனர்.

கேரளாவில் மாவோயிஸ்டுகள் நடமாட்டம்

இந்த மாவோயிஸ்டுகள் குழு, காலை 6 மணி அளவில் கோட்டியூர் வனப்பகுதி வழியாக அம்பயதோட் பகுதிக்கு வந்துள்ளதாக தெரியவந்துள்ளது.

இதையும் படிங்க: தஞ்சாவூர் தளம் முக்கியமானது ஏனென்றால்...

Intro:sendBody:sendConclusion:No
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.