ETV Bharat / bharat

’பொருளாதாரத்தை மீட்டெடுக்க மன்மோகன்சிங்கால்தான் முடியும்': போராட்டத்தில் வெடித்த காங்கிரஸ்காரர்கள்!

author img

By

Published : Sep 20, 2019, 8:59 PM IST

டெல்லி: மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் வீட்டை முற்றுகையிட்டு நூற்றுக்கும் மேற்பட்ட காங்கிரஸ் கட்சி இளைஞரணியினர் போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

iyc-protests-near-sitharmans-residence

இந்தியாவில் ஆட்டோமொபைல்ஸ் உள்ளிட்ட துறை சார்ந்த நிறுவனங்கள் பொருளாதாரத்தில் கடும் சரிவை சந்தித்து வருவதால், பொருளாதாரம் மந்தநிலையை அடைந்துள்ளது என்று பொருளாதார வல்லுநர்கள், எதிர்க்கட்சிகள் ஆகியோர் கூறிவருகின்றனர்.

இந்நிலையில், டெல்லியில் உள்ள மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் இல்லத்தை முற்றுகையிட்டு காங்கிஸ் கட்சியின் இளைஞரணியினர் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். பொருளாதாரத்தில் இந்தியா கடும் வீழ்ச்சியைச் சந்தித்து வருகிறது, அதை சரிகட்டுவதற்கு மத்திய அரசு எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை என்று கூறி கண்டன முழக்கங்களை காங்கிரஸ் கட்சியினர் எழுப்பினர்.

மேலும் இந்தியாவில் கடந்த நாற்பது ஆண்டுகளைக் காட்டிலும் தற்போது இளைஞர்களுக்கான வேலையின்மை அதிகரித்துள்ளது. பொருளாதாரத்தில் ஏற்பட்டிருக்கும் மந்த நிலையால், தற்போது பணியில் இருக்கும் நபர்களுக்கும் வேலை இழக்கும் நிலை அதிகம் உருவாகியுள்ளது என்று குற்றம்சாட்டினர்.

மேலும் தற்போது பொருளாதாரம் ஐசியூவில் இருப்பதுபோல் மிகவும் ஆபத்தான நிலையில் உள்ளது, அதை மீட்டெடுத்து வளர்ச்சிப் பாதையை நோக்கி, நடைபோட வைக்க முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங்கால் தான் முடியும் என்றும், ஆகையால் அதற்கு மத்திய அரசு முன்வந்து அரசு சார்பாக அவரிடம் பொருளாதார வளர்ச்சி குறித்து ஆலோசனை நடத்த வேண்டும் என்று காங்கிரஸ் கட்சியின் இளைஞரணியினர் வலியுறுத்தி உள்ளனர்.

போராட்டத்தில் ஈடுபட்ட நூற்றுக்கும் மேற்பட்ட காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த இளைஞர்களை காவல்துறையினர் கைது செய்து பின் விடுவித்துள்ளனர்.

மேலும் படிக்க

நாட்டில் தற்போது பொருளாதார நெருக்கடி இல்லையாம்! - சொல்கிறார் மத்திய அமைச்சர்

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.