இரண்டு அம்ச கோரிக்கைகளை முன்வைத்து போராட்டத்தில் ஈடுபட்ட ஜேஎன்யு மாணவர்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்டது. இது நாடு முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்திவருகிறது. இதை கண்டித்து மலையாள நடிகர்கள் கருத்து வெளியிட்டுள்ளனர்.
நடிகர் பிரித்திவிராஜ் தனது பேஸ்புக் பக்கத்தில், "பல்கலைக்கழகத்தில் நுழைந்து மாணவர்கள் மீது நடத்தப்பட்ட தாக்குதல் சம்பவம் சட்டம் ஒழுங்கின் மீது குறைந்தபட்ச நம்பிக்கை உள்ளதை காட்டுகிறது. இது, ஜனநாயக படுகொலை. எந்தக் கொள்கையை நீங்கள் பிரதிநிதித்துவப்படுத்தினாலும் எதற்காக நீங்கள் போராடினாலும் வன்முறையும் காழ்ப்புணர்ச்சியும் எதற்கும் தீர்வாகாது" என பதிவிட்டுள்ளார்.
ஜேஎன்யு தாக்குதல் குறித்து நடிகை மஞ்சு வாரியர், "தொலைக்காட்சியில் மாணவர்கள் ரத்த வெள்ளத்தில் மிதப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தேன். நாட்டின் அறிவுச் சின்னமாக ஜேஎன்யு விளங்குகிறது. அங்கு படித்தவர்கள்தான் நம்மை இப்போது ஆட்சி செய்கின்றனர். அரசியல் வேறாக இருந்தாலும் அவர்களின் நாட்டுப்பற்றை கேள்விக்குள்ளாக்கக் கூடாது" என்றார்.
இதையும் படிங்க: நிர்பயா வழக்கு: தூக்கிலிடப்படுவார்களா குற்றவாளிகள்?