ETV Bharat / bharat

மகாராஷ்டிராவில் வாக்குப்பதிவு மந்தம்!

மும்பை: மகாராஷ்டிரா சட்டப்பேரவைத் தேர்தலில் பிற்பகல் மூன்று மணிவரை 43.14 விழுக்காடு வாக்குகள் பதிவாகியுள்ளன.

Voting
author img

By

Published : Oct 21, 2019, 4:44 PM IST

மகாராஷ்டிராவில் சட்டப்பேரவைத் தேர்தல் இன்று நடைபெற்றுவருகிறது. மொத்தமுள்ள 288 தொகுதிகளில் பாஜக கூட்டணி சார்பாக சிவசேனா 124 தொகுதிகளில் போட்டியிடுகிறது. பாஜக 150 தொகுதிகளிலும் கூட்டணியில் உள்ள சிறிய கட்சிகள் மீதமுள்ள தொகுதிகளில் போட்டியிடுகின்றன. அதேபோல் காங்கிரஸ் கூட்டணியில் இடம்பெற்றுள்ள தேசியவாத காங்கிரஸ் 117 தொகுதிகளில் போட்டியிடுகிறது. காங்கிரஸ் 146 தொகுதிகளில் போட்டியிடுகிறது.

காலை 7 மணி முதல் நடைபெற்றுவரும் வாக்குப்பதிவு மந்தநிலையில் உள்ளது. பிற்பகல் மூன்று மணிவரை மகாராஷ்டிராவில் 43.14 விழுக்காடு வாக்குகள் மட்டுமே பதிவாகியுள்ளன. கோஷ்டி பூசலுக்குப் பெயர்போன காங்கிரஸ் இந்த முறையும் கடும் நெருக்கடியை சந்தித்துள்ளது. இந்தத் தேர்தலைப் பொறுத்தவரை பாஜகவுக்கு பெரும் சவாலை காங்கிரஸ் கூட்டணி அளிக்கவில்லை எனக் கூறப்படுகிறது.

பாஜக கூட்டணியில் சில கருத்துவேறுபாடுகள் இருந்தபோதிலும் ஆட்சிக்கு எதிரான மனநிலை அந்தளவுக்கு இல்லை என்று அரசியல் வல்லுநர்கள் கூறுகின்றனர். இருந்தபோதிலும் விவசாயப் பிரச்னை எந்தளவுக்கு தேர்தலில் எதிரொலிக்கும் என்பது தேர்தல் முடிவுகள் வெளியாகும் அக்டோபர் 24 ஆம் தேதி தெரிந்துவிடும்.

இதையும் படிங்க: காமராஜ் நகர் தொகுதி இடைத்தேர்தல்: காங்கிரஸ்-என்.ஆர்.காங்., இடையே வாக்குவாதம்

Intro:Body:

Maharashtra Assembly Elections - update

Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.