மகாராஷ்டிரா மாநிலம் சங்கிலி மாவட்டத்தில் உள்ள காத்தவ் கிராமம் சர்பாஞ்ச் பகுதியைச் சேர்ந்தவர் ஆனந்தா பட்டீல் (56). இவரது சகோதர் கஞ்சன் பட்டீல் துணை முதலமைச்சர் அஜித் பவாருக்கு உதவியாளராக உள்ளார்.
இந்நிலையில் ஆனந்தா பட்டீல் வெட்டி படுகொலைசெய்யப்பட்டார். இன்று காலை 11.30 மணியளவில் இருசக்கர வாகனத்தில் வந்த அடையாளம் தெரியாத இரண்டு நபர்கள், ஆனந்தா பட்டீலை வெட்டி கொலைசெய்துவிட்டு தப்பியோடினர்.
இது குறித்து காவலர்கள் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்திவருகின்றனர். தேசியவாத காங்கிரஸ் பிரமுகர் வெட்டி படுகொலைசெய்யப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மகாராஷ்டிராவில் சிவசேனா, தேசியவாத காங்கிரஸ், காங்கிரஸ் கூட்டணி ஆட்சி நடந்துவருகிறது.
இதையும் படிங்க: இளைஞர்களை தயார்படுத்த வேண்டும்' - குடியரசு துணைத் தலைவர்