ETV Bharat / bharat

மேக் இன் இந்தியா திட்டத்தின் கீழ் 3 ஆயிரம் வென்டிலேட்டர்கள் உற்பத்தி! - கோவிட்-19 நெருக்கடி

டெல்லி: நாட்டில் பல்வேறு பகுதிகளுக்கு உள்நாட்டிலேயே தயாரிக்கப்பட்ட 3000 வென்டிலேட்டர்கள் விநியோகிக்கப்பட்டுள்ளதாக மத்திய சுகாதாரத் துறை உயர் அலுவலக வட்டாரம் தகவல் தெரிவித்துள்ளது.

மேக் இன் இந்தியா திட்டத்தின் கீழ் 3ஆயிரம் வென்டிலேட்டர்கள் உற்பத்தி

author img

By

Published : Jun 16, 2020, 4:26 PM IST

சுவாசிப்பதில் கடும் பாதிப்பிற்குள்ளாகி வரும் கோவிட்-19 நோயாளிகளுக்குத் தேவையான மிக முதன்மையான உயிர்காக்கும் மருத்துவ உபகரணமாக வென்டிலேட்டர்கள் கருதப்படுகின்றன. கோவிட்-19 தொற்று நோயை எதிர்த்துப் போராடி வரும் மாநில அரசுகளுக்கு உதவும் வகையில், மேக் இன் இந்தியா திட்டத்தின் கீழ உருவாக்கப்பட்டுள்ள உள்நாட்டு வென்டிலேட்டர்களை மத்திய அரசு நாடு முழுவதும் விநியோகிக்கத் தொடங்கியுள்ளது.

முதல் கட்டமாக, உள்நாட்டிலேயே தயாரிக்கப்பட்ட 3000 வென்டிலேட்டர்களை சில மாநிலங்களுக்கு விநியோகிக்கப்பட்டுள்ளன. கடந்த மே 1ஆம் தேதி, மத்திய சுகாதார அமைச்சகம் ஒரு செய்திக்குறிப்பில், "ஜூன் மாதம் நாடு முழுவதும் 75,000 வென்டிலேட்டர்களின் தேவை ஏற்படும் என ஐ.சி.எம்.ஆரின் அறிக்கையை அடுத்து மத்திய அரசு விரைவான நடவடிக்கைகளை முன்னெடுக்கத் தொடங்கியது.

அதன்படி, மாநில அரசுகளின் தேவைகள் குறித்து தகவல்கள் சேகரிக்கப்பட்டன. அந்த தேவைகளை மத்திய அரசு விரைந்து பூர்த்தி செய்துவருகின்றது. இதுவரை, குறைந்தபட்சம் 3000 வென்டிலேட்டர்கள் மாநில அரசுகளிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளன. அவை பல்வேறு மருத்துவமனைகளில் வைக்கப்படும். எதிர்வரும் நாள்களில், வென்டிலேட்டர்களின் உள்நாட்டு உற்பத்தி வேகமடைய வைக்க தேவையான முயற்சிகளையும் பிற துறைகளுடன் இணைந்து முன்னெடுத்து வருகிறது" என தெரிவிக்கப்பட்டுள்ளது.

'மேக் இன் இந்தியா' திட்டத்தின் கீழ் மத்திய அரசு எடுத்துவரும் இந்த முன்முயற்சியில் பங்களிப்பை செலுத்த உள்நாட்டு வென்டிலேட்டர் உற்பத்தியாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர். அவர்களிடம் இது தொடர்பான விவரக்குறிப்புகள், பயிற்சி மற்றும் பிற நெறிமுறைகளை இறுதி செய்து மத்திய அரசு வழங்கியுள்ளது.

வென்டிலேட்டர்களை விரைவாக உற்பத்தி செய்து மக்களிடம் கொண்டு சேர்க்க புதிய விநியோகச் சங்கிலிகளை உருவாக்கும் அவை வழிநடத்தப்பட்டு வருகின்றது. சப்ளையர்கள் மற்றும் மாநில அரசாங்கங்களுடனான தளவாட சிக்கல்களுக்கும் அவர்களுக்கு உதவியது மற்றும் நுகர்பொருள்கள் மற்றும் பலவற்றின் ஏற்பாடும் முடிவு செய்யப்பட்டது.

ஸ்கான்ரேவுடன் இணைந்து பாரத் எலெக்ட்ரானிக்ஸ் லிமிடெட் (பிஇஎல்) 30 ஆயிரம் வென்டிலேட்டர்களை உற்பத்தி செய்ய தொடங்கியுள்ளது. உள்நாட்டு உற்பத்தி நிறுவனமான அக்வா (ஆட்டோமொபைல் நிறுவனமான மாருதி சுசுகி லிமிடெட் உடன் இணைந்து) 10,000 வென்டிலேட்டர்களை உற்பத்தி செய்ய அறிவுறுத்தப்பட்டுள்ளது.

ஏ.எம்.டி.இசட் ( ஏ.பி. மெட்டெக் சோன்) சுமார் 13,500 யூனிட்டுகளுக்கான ஆர்டர்களைப் பெற்றுள்ளது. மற்றொரு இந்திய நிறுவனமான ஜோதி சி.என்.சி 5,000 வென்டிலேட்டர்களை உருவாக்கும் உத்தரவை பெற்றிருக்கிறது. ஹாமில்டன், மைண்ட்ரே மற்றும் டிரேகர் போன்ற சர்வதேச நிறுவனங்களுக்கும் வென்டிலேட்டர்களை உற்பத்தி செய்து வழங்க வேண்டுமென மத்திய அரசு கோரிக்கை விடுத்துள்ளது.

நாடு முழுவதும் கோவிட்-19 அச்சுறுத்தலை எதிர்கொள்ளவும், மருத்துவ உள்கட்டமைப்பை மேம்படுத்துவதற்கும் 50000 'மேக்-இன்-இந்தியா' வென்டிலேட்டர்களை பிரதமரின் பி.எம். கேர்ஸ் நிதியிலிருந்து கொள்ளளவு செய்ய 2000 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக அறிய முடிகிறது. இந்த வென்டிலேட்டர்கள் அனைத்து மாநிலங்கள் / யூனியன் பிரதேசங்களில் உள்ள கோவிட்-19 சிறப்பு அரசு மருத்துவமனைகளுக்கு வழங்கப்படும் என (மே 13ஆம் தேதி அன்று) மத்திய சுகாதாரத்துறை அறிவித்திருந்தது.

ஜூன் 16 நிலவரப்படி வரை, அரசாங்கம் ஒரு கோடிக்கு மேற்பட்ட எண்ணிக்கையிலான தனிநபர் பாதுகாப்பு உபகணரங்களும் (பிபிஇ), ஒரு கோடிக்கும் அதிகமான என்-95 முகக் கவசங்களும் மத்திய சுகாதார அமைச்சகத்தால் நாடு முழுவதும் வழங்கப்பட்டுள்ளதாக உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.