நாடாளுமன்ற நிதிநிலை அறிக்கைக் கூட்டத்தொடர் இன்றுடன் நிறைவடைந்தது. கடந்த பிப்ரவரி மாதம் ஒன்றாம் தேதி நிதிநிலை அறிக்கைத் தாக்கலுக்குப்பின் விவாதத்திற்காகக் கூடிய நிதிநிலை அறிக்கைக் கூட்டத்தொடர், கரோனா வைரஸ் பாதிப்பின் காரணமாக அவசரகதியில் நிறைவடைகிறது.
கரோனா பாதிப்பைக் கட்டுப்படுத்தும் நடவடிக்கையாக பொது அலுவல்கள் தற்காலிகமாக நிறுத்திவைக்கப்பட்டு நாடு முழுவதும் முடங்கப்பட்டுள்ளது. அனைத்து மாநிலங்களில் ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டு அத்தியாவசிய பொருள்கள் பயன்பாடு மட்டுமே செயல்பட்டுவருகிறது.
இந்நிலையில் நாடாளுமன்றத்தை ஒத்திவைப்பது தொடர்பாக டெல்லியில் இன்று அனைத்துக் கட்சிக் கூட்டம் நடைபெற்றது. இதையடுத்து, வழக்கத்திற்கு மாறாக நிதி மசோதா இம்முறை எந்தவித விவாதமுமின்றி உடனடியாக நிறைவேற்றப்பட்டு, நாடாளுமன்றத்தின் இரு அவைகளும் ஒத்திவைக்கப்பட்டுள்ளன.
இதையும் படிங்க: கரோனா பாதிப்புக்கு பாகிஸ்தானில் லாக்டவுனுக்கு வாய்ப்பில்லை கைவிரித்த இம்ரான் கான்