மக்களவையில் மத்திய சுகாதாரத் துறை அமைச்சர் டாக்டர் ஹர்ஷ் வர்தன் உரையாற்றினார்.
அப்போது அவர் பேசுகையில், "மத்திய பட்ஜெட்டில், தடுப்பூசி போடுவதற்கும் மக்களின் உயிரைக் காப்பாற்றுவதற்கும் ரூ.35,000 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது.
தேவைப்பட்டால் இந்தத் தொகை அதிகரிக்கப்படும். இதுவரை 22 நாடுகளிடமிருந்து தடுப்பூசி வழங்குவதற்கான கோரிக்கைகளை நாம் பெற்றுள்ளோம். இவற்றில், ஏற்கனவே 15 நாடுகளுக்கு வழங்கப்பட்டுள்ளன" எனத் தெரிவித்தார்.
இதையும் படிங்க: இந்தியாவில் பாதுகாவலர்களுக்கு துரோகம் இழைக்கப்பட்டுள்ளது - ராகுல் காந்தி