இதுகுறித்து ஹைதராபாத் வானிலை ஆய்வு மைய இயக்குநர் நாகரத்னா, "மத்திய வங்காள விரிகுடாவில் உள்ள குறைந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி தற்போது மேற்கு மத்திய வங்காள விரிகுடாவிற்கு நகர்ந்துள்ளது. அந்த தாழ்வுப் பகுதி அடுத்த 24 மணி நேரத்தில் வடமேற்கு நோக்கிச் செல்ல வாய்ப்புள்ளது.
அதன்காரணமாக அடுத்த 24 மணி நேரங்களுக்கு மாநிலத்தில் லேசான முதல் மிதமான மழை பெய்யக்கூடும். சில இடங்களில் பலத்த மழை பெய்ய வாய்ப்பு உள்ளது. வழக்கமாக பெய்யக் கூடிய மழையாக இருக்கும் என்பதால் மக்கள் கவலைப்பட வேண்டாம்" எனத் தெரிவித்தார்.
இதையும் படிங்க: மகாராஷ்டிராவில் மின்னல் தாக்கி 25 பேர் காயம்