கடந்த ஆறாம் தேதி டெல்லி ஜவகர்லால் நேரு பல்கலைக்கழகத்தில் நடைபெற்ற மாணவர் பேரவைத்தேர்தலின் முடிவுகள் டெல்லி உயர்நீதிமன்ற அனுமதியுடன் நேற்று அறிவிக்கப்பட்டது.
இதில் இடதுசாரி மாணவர் அமைப்புகளின் கூட்டணி, தலைவர்,துணைத்தலைவர், செயலர் மற்றும் இணைச்செயலர் என நான்கு முக்கியப் பதவிகளை வென்றுள்ளது.
தலைவர் பதவிக்கு போட்டியிட்ட அய்ஷி கோஷ் 2,313 வாக்குகள் பெற்று தன்னை எதிர்த்துப்போட்டியிட்ட ஏபிவிபி அமைப்பைச்சார்ந்த ஜன்கிட் என்பவரை ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் வென்றுள்ளார்.
துணைத்தலைவர் பதவிக்கு போட்டியிட்ட சாகேத் மூன் 3,365 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார்.சந்திர யாதவ் 2,518 வாக்குகள் பெற்று பொதுச்செயலர் பதவியைக் கைப்பற்றினார். இணைச்செயலராக டேனிஷ் 3,295 வாக்குகள் பெற்று தேர்ந்தெடுக்கப்பட்டார்.
மாணவர் பேரவைத்தேர்தலில் கடந்த ஏழு ஆண்டுகளாக இல்லாத அளவிற்கு 5,700 மாணவர்கள் தங்கள் வாக்குகளை செலுத்தியிருப்பது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: அம்பேத்கர், பெரியாரிய கருத்துக்களை பேசிய மாணவனை நீக்கிய பல்கலைக்கழகம்!