காஷ்மீரின் சோபியன் மாவட்டத்தைச் சேர்ந்த சித்ராகம் கிராமத்தில் நேற்று பயங்கரவாதிகள் பதுங்கியிருப்பதாகப் பாதுகாப்புப் படையினருக்குத் தகவல் கிடைத்தது.
இதையடுத்து அப்பகுதியைப் பாதுகாப்பு வளையத்திற்குள் கொண்டுவந்தனர். தொடர்ந்து பாதுகாப்புப் படையினரை நோக்கி பயங்கரவாதிகள் துப்பாக்கிச்சூடு நடத்த தொடங்கினர்.
பாதுகாப்புப் படையினர், பயங்கரவாதிகளின் தாக்குதலுக்குப் பதிலடி கொடுத்தனர். இந்தத் தாக்குதலில் மூன்று பயங்கரவாதிகள் சுட்டு வீழ்த்தப்பட்டனர்.
இது குறித்து காவல் துறையினர் கூறுகையில், "சோபியன் மாவட்டத்தில் பயங்கரவாதிகளுடன் நடைபெற்ற இரண்டு துப்பாக்கிச் சூடு சம்பவத்தில் பயங்கரவாதிகள் மூவர் சுட்டு வீழ்த்தப்பட்டனர்.
அவர்கள் லஷ்கர்-இ-தொய்பா அமைப்பைச் சேர்ந்தவர்கள். இந்த அமைப்பின் கமாண்டரும் இதில் சுட்டு வீழ்த்தப்பட்டார் என்று தெரிவிக்கப்பட்டது" என்றனர்.
இந்த ஆண்டில் குப்வாரா பகுதியில் பயங்கரவாதிகளால் மத்திய ரிசர்வ் காவல் படையைச் சேர்ந்த ஆறு பேர் சுட்டுக் கொல்லப்பட்டதையும் காவல் துறையினர் குறிப்பிட்டனர்.