இலங்கை தேர்தல் நாளை (16ஆம் தேதி) நடக்கிறது. இந்தத் தேர்தலில் அதிபர், பிரதமர் என யாரும் போட்டியிடவில்லை. ஆனால் 35 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர். இது கடந்த 2015ஆம் ஆண்டு தேர்தலைக் காட்டிலும் இரு மடங்கு அதிகமாகும். இருப்பினும் ஆளும் தரப்பில் களமிறங்கியுள்ள சஜித் பிரேமதாச, எதிர்தரப்பில் உள்ள கோத்தபய ராஜபக்ச ஆகியோர் பிரதான அதிபர் வேட்பாளர்கள்.
முன்னாள் அதிபர் ராஜபக்சவுக்கு தமிழர்கள் மத்தியில் அதிருப்தி நிலவுகிறது. இதனால் அவரின் இளைய சகோதரர் தமிழர்கள் மத்தியில் வாக்குகள் கேட்க அஞ்சுகிறார். பிரேமதாசவிற்கு தமிழர்கள் மட்டுமின்றி சிங்களர்களின் ஆதரவும் உள்ளது. அவரின் தந்தை ஒரு நேர்மையான அரசியல்வாதியாகத் திகழ்ந்தார். அவரின் பெயரை ஆளும் தரப்பு வாக்குக்காக பயன்படுத்துகிறது.
இலங்கையின் மொத்த மக்கள்தொகையில் 12 விழுக்காடு தமிழ், 10 விழுக்காடு இஸ்லாமியர்கள், 7 விழுக்காடு கிறிஸ்தவர்கள் உள்ளனர். இந்த சிறுபான்மை குழுக்களின் வாக்குகள் அதிபர் தேர்தலில் முக்கியப் பங்காற்றும். இந்த வாக்குகள் ராஜபக்சவுக்கு எதிராக பூமராங் போன்று திரும்பும் என்றும் அரசியல் நோக்கர்கள் கூறுகின்றனர்.
எனினும் ஈஸ்டர் தாக்குதலில் பாதிக்கப்பட்ட கிறிஸ்தவர்கள் ராஜபக்சவுக்கு ஆதரவு அளிப்பார்கள் என்றும் கூறப்படுகிறது. இஸ்லாமியரின் வாக்குகள் பிரேமதாசவுக்கு ஆதரவாகவே இருக்கும். இந்தத் தேர்தலை இந்தியா கழுகுப் பார்வையுடன் உற்று நோக்கும்.
இதையும் படிங்க: 'சீனா நெருக்கம் குறித்து இந்தியாவுக்கு கவலை வேண்டாம்' - இலங்கை அதிபரின் ஆலோசகர் அதிரடி