கரோனா காரணமாக வெளிநாடுகளில் சிக்கியிருக்கும் இந்தியர்களை தாயகம் அழைத்துவர 'வந்தே பாரத் மிஷன்' திட்டத்தின் கீழ் சிறப்பு விமானங்கள் இயக்கப்படுகின்றன.
அதன்படி, துபாயிலிருந்து கேரள மாநிலம் கரிப்பூர் விமான நிலையத்திற்கு 190 பயணிகளுடன் வந்த ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானம் நேற்றிரவு (ஆக.7) விபத்துக்குள்ளானது. கேரள மாநிலத்தில் கனமழை பெய்து வருவதால், தரையிறங்கும்போது ஓடுபாதையில் வழுக்கியதால் விமானம் விபத்துக்குள்ளாகியுள்ளது. இதில் இதுவரை 19 பேர் உயிரிழந்தும், பலர் காயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இந்தக் கொடூர விபத்தில் சிக்கிய ஒரு சிறுவனை மீட்ட காவல் துறையினர், மருத்துவமனையில் அனுமதித்தனர். இதனையடுத்து சிறுவனின் பெற்றோர் குறித்த தகவல் தெரியாததால், சிறுவனின் புகைப்படத்தை சமூக வலைதளத்தில் பதிவிட்டனர். இந்நிலையில், இதனைப் பார்த்த பெற்றோர், சிறுவனை கண்டறிந்து மீட்டுள்ளனர்.
இதையும் படிங்க...இருமுறை கைவிடப்பட்ட தரையிறங்கும் முயற்சி... 3ஆவது முறை நிகழ்ந்த பெரும் விபத்து!