இந்தியாவில் முதன் முதலில் விவசாயிகளுக்காக மத்திய அரசு கிசான் ரயில் சேவை திட்டத்தைத் தொடங்கியது. கடந்த மூன்று தினங்களுக்கு முன் மகாராஷ்டிராவிலிருந்து பிகாருக்கு இந்த ரயில் வேளாண் பொருட்களைக் கொண்டு சேர்த்தது.
இதுகுறித்து பிரதமர் மோடி தெரிவித்ததாவது, "இந்த கிசான் ரயில் சேவை மூலம் கிராமங்களில் அறுவடை செய்யப்படும் காய்கறிகள், பழங்கள், பூக்கள் உள்ளிட்ட வேளாண் பொருட்களை நகரங்களுக்கு விரைவாக கொண்டு செல்லப்படும்.
இந்தத் திட்டத்தினால் சிறு, குறு விவசாயிகள் பயன்பெறுவதோடு வேலைவாய்ப்புகள் அதிகரிக்கக் கூடும். வேளாண்துறை அடுத்த கட்ட வளர்ச்சியை அடைய கிசான் ரயில் திட்டம் ஒரு புதிய உதயமாகும்.
தற்போது கிசான் ரயில் சேவையினால் மகாராஷ்டிரா, பிகார், உத்தரப் பிரதசேம், மத்தியப் பிரதேசம் உள்ளிட்ட மாநில விவசாயிகளின் பொருட்களைக் கொண்டு சேர்க்க முயன்றுள்ளோம். கூடிய விரைவில் அனைத்து இந்திய விவசாயிகளும் இந்தத் திட்டத்தினால் பயன்பெறுவர்" எனக் கூறினார்.
இதையும் படிங்க: உள்துறை அமைச்சர் அமித் ஷா கரோனாவிலிருந்து மீண்டாரா?