உத்தரப் பிரதேச மாநிலம் உன்னாவ் மாவட்டத்தைச் சேர்ந்த 17 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த வழக்கில் பாஜக சட்டப்பேரவை உறுப்பினர் குல்தீப் சிங் கைதுசெய்யப்பட்டு சிறையில் உள்ளார். இந்த வழக்கு நீதிமன்றத்தில் உள்ள நிலையில், பாதிக்கப்பட்ட சிறுமி சர்ச்சைக்குரிய வகையில் விபத்துக்குள்ளானார். இந்த விபத்தில் சிறுமியின் இரண்டு அத்தைகள் உயிரிழந்தனர். இவர்கள் இருவரில் ஒருவர் பாலியல் வன்கொடுமை வழக்கின் முக்கிய சாட்சியாவார். இந்த நிகழ்வு நாடு முழுவதும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இந்நிலையில் இந்த விபத்தில் உயிர் பிழைத்தவர் கூறுகையில் என்.எச். 31 ரெய் பரேலியில் கில்லர் டிரக் நேராக வந்து எங்கள் காரை தாக்கியது என்றும்,இந்த விபத்திலிருந்து தப்பிக்க காரை ஓட்டி வந்த வழக்கறிஞர் தலைகீழ் கியரில் ஓட்ட முயற்ச்சித்த போது டிரக் தங்கள் கார் மீது மோதியது என்றும் கூறினார். இந்த வழக்கை விசாரிக்க உச்ச நீதிமன்றம் சி.பி.ஐ-க்கு மேலும் இரண்டு வார கால அவகாசம் வழங்கியுள்ளது.