ETV Bharat / bharat

புதுச்சேரி டூ குமரி... சிறுவனின் 580 கிலோ மீட்டர் சைக்கிள் சாதனை பயணம்!

புதுச்சேரி: குழந்தை தொழிலாளர் ஒழிப்பை வலியுறுத்தி புதுச்சேரியிலிருந்து கன்னியாகுமரி வரை சிறுவனின் சாதனை சைக்கிள் பயணம் இன்று தொடங்கப்பட்டது.

author img

By

Published : Nov 30, 2019, 9:59 PM IST

cycle
சைக்கிள் சாதணை பயணம்

மதுரையைச் சேர்ந்த மாணவர் பிரமோத், பல்வேறு நிகழ்ச்சிகள் மூலம் பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகிறார். மேலும், பல்வேறு சைக்கிள் போட்டிகளில் பங்கேற்று விருதுகள் பெற்றுள்ளார்.

இந்நிலையில், இவர் அடுத்த முயற்சியாக குழந்தை தொழிலாளர் ஒழிப்பு, குழந்தை பாலியல் வன்கொடுமை எதிர்ப்பு ஆகியவற்றை வலியுறுத்தி இந்தியன் புக் ஆஃ ரெக்கார்டுக்காக புதுச்சேரியிலிருந்து கன்னியாகுமரி வரை 580 கிலோ மீட்டர் தூரம் சைக்கிள் சாதனை பயணம் செய்ய முடிவு செய்தார். புதுச்சேரி கடற்கரை சாலை காந்திசிலை அருகே நடைபெற்ற தொடக்க நிகழ்ச்சியில் புதுச்சேரி சைக்கிள் கிளப் அசோசியேஷன் பொது செயலாளர் குணசேகரன் இப்பயணத்தை தொடக்கிவைத்தார்.

சைக்கிள் சாதனை பயணம்

அதன்படி, இன்று காலை 15 வயதிற்குட்பட்டவர்கள் பிரிவில் இப்பயணத்தை 36 மணி நேரத்தில் கடக்க வேண்டும் என்ற இலக்கோடு புறப்பட்டுள்ளார். இதில், உணவு இடைவேளை நேரத்தை தவிர்த்து, நாளை கன்னியாகுமரியின் எல்லையை அடைவார் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்தியன் புக் ஆஃ ரெக்கார்டு கண்காணிப்பில் இப்பயணம் மேற்கொள்ளப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க: 'ஆங்கிலம் பேசறது அல்வா சாப்பிடற மாதிரி' - அசத்தும் அரசுப்பள்ளி மாணவர்கள்!

Intro:புதுச்சேரியில் இருந்து கன்னியாகுமரி வரை குழந்தை தொழிலாளர் ஒழிப்பு வலியுறுத்தி சிறுவன் சைக்கிள் சாதனை பயணம் மேற்கொண்டுள்ளார்.
Body:புதுச்சேரியில் இருந்து கன்னியாகுமரி வரை குழந்தை தொழிலாளர் ஒழிப்பு வலியுறுத்தி சிறுவன் சைக்கிள் சாதனை பயணம் மேற்கொண்டுள்ளார்.

மதுரை சேர்ந்த மாணவர் பிரமோத் இவர் பல்வேறு நிகழ்ச்சிகள் மூலம் பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகிறார் மேலும் பல்வேறு சைக்கிள் போட்டிகளில் பங்கேற்று விருதுகள் பெற்றுள்ளார்.
அதில் ஒரு பகுதியாக குழந்தை தொழிலாளர் ஒழிப்பு மற்றும் குழந்தை பாலியல் வன்கொடுமை எதிர்ப்பு ஆகியவை வலியுறுத்தி இந்தியன் புக் ஆஃ ரெக்கார்டுக்காக புதுச்சேரியில் இருந்து கன்னியாகுமரி வரை 580 கிலோ மீட்டர் தூரம் சைக்கிள் சாதனை பயணத்தை துவக்கியுள்ளார் 15வயதிற்குற்பட்டவர்கள் பிரிவில் இதனை 36 மணி நேரத்தில் கடக்க வேண்டும் என்ற இலக்கோடு இன்று காலை துவக்கினார் ஏற்கனவே 15 வயதுக்கு கீழ் உள்ள பிரிவுகளில் 363 கிலோமீட்டர் தூரம் முந்தைய சாதனை என்பது குறிப்பிடத்தக்கது

தொடர் சைக்கிள் சாதனைப் பயணம் உணவு இடைவேளை போக நாளை கன்னியாகுமரியில் சாதனையை எல்லையை தொடுகிறார்

முன்னதாக புதுச்சேரி கடற்கரை சாலை காந்திசிலை அருகே நடைபெற்ற தொடக்க நிகழ்ச்சியில் புதுச்சேரி சைக்கிள் கிளப் அசோசியேஷன் பொது செயலாளர் குணசேகரன் இதனை துவக்கி வைத்தார் இந்த துவக்க நிகழ்ச்சியில் மாணவனின் தந்தை பேராசிரியர் கண்ணன் பங்கேற்று ள்ளார். இந்தியன் புக் ஆஃ ரெக்கார்டு கண்காணிப்பில் இப்பயணம் மேற்கொள்ளப்பட்டுள்ளதுConclusion:புதுச்சேரியில் இருந்து கன்னியாகுமரி வரை குழந்தை தொழிலாளர் ஒழிப்பு வலியுறுத்தி சிறுவன் சைக்கிள் சாதனை பயணம் மேற்கொண்டுள்ளார்.
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.