ETV Bharat / bharat

திருவனந்தபுரம் விமான நிலையம் : 'மத்திய அரசுக்கு கேரளா ஒத்துழைப்பு வழங்காது' - முதலமைச்சர் தடாலடி! - திருவனந்தபுரம் சர்வதேச விமான நிலைய லிமிடெட்

திருவனந்தபுரம் : திருவனந்தபுர விமான நிலையத்தை அதானி நிறுவனத்திடம் ஒப்படைக்கும் மத்திய அரசின் முடிவிற்கு மாநில அரசு ஒத்துழைக்காது என கேரள முதலமைச்சர் பினராயி விஜயன் திட்டவட்டமாக தெரிவித்தார்.

திருவனந்தபுரம் விமான நிலையம் : மத்திய அரசுக்கு கேரள ஒத்துழைப்பு வழங்காது முதலமைச்சர் தடாலடி!

author img

By

Published : Sep 8, 2020, 2:37 PM IST

Updated : Sep 8, 2020, 2:54 PM IST

நாடு முழுவதும் விமான நிலையங்களின் நிர்வாகம் மற்றும் பராமரிப்பை கவனிக்கும் பொறுப்பை பொதுத்துறை – தனியார் கூட்டு (பி.பி.பி.) என்ற பெயரில் 50 ஆண்டு கால ஒப்பந்த அடிப்படையில் அதானி குழுமத்திடம் ஒப்படைக்க மத்திய அரசு முடிவெடுத்துள்ளது.

இதன் காரணமாக, இந்திய விமான நிலையங்கள் ஆணையத்திடமிருந்து (Airports authority of india) திருவனந்தபுரம் விமான நிலைய தனியார் நிறுவமான அதானியின் ஏர்போர்ட் ஹோல்டிங் நிறுவனத்தின் வசம் கைமாறவுள்ளதாக அறிவிக்கப்பட்டது. இதற்கு கேரள அரசு கடுமையாக எதிர்ப்பு தெரிவித்துவருகிறது. மத்திய அரசின் இந்த நடவடிக்கைக்கு எதிராக 'திருவனந்தபுரம் சர்வதேச விமான நிலைய லிமிடெட்' என்ற பெயரில் நிறுவனம் ஒன்றை மாநில தொழில்துறை மேம்பாட்டுக் கழகம் (கே.எஸ்.ஐ.டி.சி) தொடங்கியுள்ளது.

அதானி குழு மேற்கோள் காட்டிய தொகையை செலுத்த கேரள அரசு தயாராக உள்ளது என்று மத்திய அரசுக்கு தெளிவுப்படுத்தியது. இருப்பினும், அந்த கருத்தை மத்திய அரசு ஏற்றதாக தெரியவில்லை. விமான நிலையத்தை அதானி குழுவிடம் ஒப்படைக்கும் மத்திய அரசின் நடவடிக்கையை அரசியல் ரீதியாகவும், சட்ட ரீதியாகவும் எதிர்த்துப் போராட கேரள மாநில அரசு திட்டமிட்டுள்ளது.

இது தொடர்பாக நடைபெற்ற அனைத்துக் கட்சி கூட்டத்தில், விமான நிலைய தனியார்மயமாக்கல் நடவடிக்கைக்கு எதிராக கேரள சட்டப்பேரவையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இதன் தொடர்ச்சியாக இன்று (செப்டம்பர் 8) கேரள நாடாளுமன்ற உறுப்பினர்களின் மெய்நிகர் வழி கலந்தாய்வுக் கூட்டம் நடைபெற்றது.

அப்போது முதலமைச்சர் பினராயி விஜயன் கூறுகையில், "விமான நிலையத்தை அதானி நிறுவனத்திற்கு குத்தகைக்கு விடும் முடிவை மத்திய அரசு நடைமுறைபடுத்த விரும்பினால் மாநில அரசு அதற்கு ஒத்துழைப்பு வழங்காது. விமான நிலையத்தின் செயல்பாடும், நிர்வாகமும் எஸ்.பி.வியிடம் ஒப்படைக்கப்பட வேண்டும்.

அதில் மாநில அரசுக்கு பங்கு உள்ளது. கொச்சி, கண்ணூரில் உள்ள விமான நிலையங்களை நிர்வகிப்பதில் மாநில அரசுக்கு ஏற்கனவே நல்ல முன் அனுபவம் உண்டு" என தெரிவித்தார்.

மேலும், நடைபெறவுள்ள மழைக்கால நாடாளுமன்றக் கூட்டத்தொடரின் அமர்வில் திருவனந்தபுரம் சர்வதேச விமான நிலையத்தை 50 ஆண்டுகளுக்கு அதானி நிறுவனத்திற்கு குத்தகைக்கு விடும் நடவடிக்கைக்கு எதிராக இரு அவைகளிலும் எதிர்த்து போராட வேண்டுமென கேரள எம்.பி.க்கள் ஒருமனதாக முடிவு செய்துள்ளனர்.

Last Updated : Sep 8, 2020, 2:54 PM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.