ETV Bharat / bharat

'சி.ஏ.ஏ.வை எதிர்த்தாலும் சட்டத்தை மீறக் கூடாது' - பினராயி விஜயனுக்கு ஆளுநர் அறிவுரை - குடியுரிமை திருத்தச் சட்ட எதிர்ப்பு

டெல்லி: குடியுரிமை திருத்தச் சட்டத்தை எதிர்த்தாலும், சட்டத்தை மீறக் கூடாது என கேரள முதலமைச்சர் பினராயி விஜயனுக்கு ஆளுநர் ஆரீப் முகமது கான் அறிவுறுத்தியுள்ளார்.

Kerala governor fights back, says object CAA but obey Constitution

author img

By

Published : Jan 17, 2020, 6:31 PM IST

கேரள ஆளுநர் ஆரீப் முகமது கான் டெல்லியில் இன்று செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது:

அரசியலமைப்பில் எனது பங்கு என்னவென்றால், அரசு விதிகளின்படி செயல்படுவது. நான் மேலாதிக்கத்திற்கு உரிமை கோரவில்லை. என்னைப் பொறுத்தவரை கடமைகளின் விதிகள் தெளிவாக உள்ளன.

ஒரு முதலமைச்சர் என்னை எவ்வாறு அணுக வேண்டும் என்பது ஏற்கனவே நிறுவப்பட்டுள்ளது. இதுபோன்ற எந்தவொரு உத்தரவுகளையும் நிறைவேற்றுவதற்கு முன்பு என்னிடம் கருத்துகள் கேட்பதற்கு மாநில முதலமைச்சர் கடமைப்பட்டவர்.

குடியுரிமை திருத்தச் சட்டம், தேசிய குடிமக்கள் பதிவேடு, தேசிய மக்கள் தொகை கணக்கெடுப்பு குறித்து அரசு, எதிர்க்கட்சி என மாற்றுக் கருத்தை வைத்திருக்கும் எவருடனும் எனக்கு எந்தப் பிரச்னையும் இல்லை.

எல்லோரும் சுதந்திரமானவர்கள். ஆனால் கேரள அரசு சட்டப்பேரவை விதிகளை மீறுகிறது. கருத்து வேறுபாடு என்பது ஜனநாயகத்தில் சகஜம்.

இவ்வாறு ஆரீப் முகமது கான் கூறினார்.

கேரள முதலமைச்சர் பினராயி விஜயன், குடியுரிமை திருத்தச் சட்டத்தை எதிர்த்து டெல்லி உச்ச நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்துள்ளார். இது தொடர்பாக அவர் மாநில ஆளுநர் ஆரீப் முகமது கானிடம் எவ்வித தகவலும் தெரிவிக்கவில்லை.

இந்தச் செய்தியை பத்திரிகை வாயிலாகவே ஆளுநர் ஆரீப் முகமது கான் அறிந்துகொண்டதாகத் தகவல்கள் வெளியானது. இது தொடர்பாக பேசிய ஆளுநர் ஆரீப் முகம்மது கான், முதலமைச்சர் பினராயி விஜயனுக்கு காட்டமான பதில் அளித்தார்.

அதில், “தாம் ஒன்றும் ரப்பர் ஸ்டாம்ப் கிடையாது” எனத் தெரிவித்திருந்தார் என்பது நினைவுகூரத்தக்கது.

இதையும் படிங்க: மாநில அரசு என்னை கலந்தாலோசித்திருக்க வேண்டும் - கேரள ஆளுநர்

Intro:Body:

Kerala Guv vs Govt

Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.