கேரள மாநிலம், இடுக்கி மாவட்டம் பெட்டிமுடி குடியிருப்புப் பகுதியில் ஆகஸ்ட் 7ஆம் தேதி இரவு ஏற்பட்ட நிலச்சரிவில், சுமார் 80 பேர் மண்ணில் புதைந்தனர். 8 நாட்களாக நடைபெற்று வரும் மீட்புப் பணியில், இதுவரை 56 பேருடைய உடல்கள் மீட்கப்பட்டுள்ளன. மேலும், இதுவரை 14 பேரை மீட்கப்படவில்லை.
இந்நிலையில் இந்த நிலச்சரிவில் தனது உரிமையாளர்களை இழந்த 'கூவி' எனும் நாயை, காவல் துறையில் உள்ள மோப்ப நாய்களுக்கு பயிற்சியளிக்கும் காவலர் அஜித் மாதவன் தத்தெடுத்துள்ளார். 'கூவி' நிலச்சரிவின் மீட்புப் பணியில் உதவியது.
'கூவி' மூலம் தான் தனுஷ்கா என்ற இரண்டு வயது சிறுமியின் சடலத்தை மீட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.